பக்கம்:தமிழ்மாலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றை,

72

கரும்பின் கணுவை உடைத்தெழுந்த சாறு வேண்டும்; அதைப்பாகு ஆக்கிக்கட்டியாக்க வேண்டும்; அக்கட்டியின் உருவாக்கம் ஒரு பசும்பொன் கிண்ணத்தில் நிகழ்த்தப்பட வேண்டும்; அக்கிண்ணத்தின் விளிம்புவரை நிறையுமாறு நிகழ வேண்டும்; நெருப்புப் பிழம்பு போன்று ஒளிதகதகக்கும் பொன்னால் அக்கிண்ணம் செய்யப்பட்டிருக்க வேண்டுமாம்; இதுபோன்ற பாட்டில் நயமான சொற்கள் சுருக்கமாகச் சுவைக்க வேண்டும்; நினைத்தாலே கருத்தை நெஞ்சில் வைரமாகப் பதிக்க வேண்டும்; இயற்கை கொஞ்ச வேண்டும்; - . அறிவு கூத்திட வேண்டும்; முழுமுதற் கருத்துக்கள் பேசவேண்டும்.

"வாட்டமில் சிறப்பில் பாட்டெனப் படுவது கரும்புகண் ணுடைத்த விரும்புபிழி இறுக மூழையில் துழைஇத் தாழா தட்டோன் எரியகைத் தன்ன எழிற்பொற் பாண்டில் விளிம்புற நிறைத்தாங்கு முதுவாய்ப் புலவோன் பாவிடைச் சுருங்கிய பயங்கெழு சொல்வில் கருதுதொறும் ஆழ்ந்த காழ்ந்த பொருள் பொதிப்ப என்புநெக் குருகும் இசையுடன் தழிஇ இயற்கையின் வழாமல் அறிவொருங் குறுத்தி இன்புணர் வெடுப்பின் அன்னே உருவாம் முழுமுதற் பொருளொடு கெழுவிடப் பயக்கும் ஆனாத் தலைமைப் பான்மைய துடைத்தே"

இவ்வாறு படித்துள்ளார். இப்பாட்டின் நடை, அக்காலப் புலமை நடை, சங்க இலக்கியம் போன்றது.இதற்குத்தான் மறைமலையடிகள் பாட்டுநடை என்று பெயர். இக்காலத்திற்குக் கடுமைதான். ஆனால், பாட்டை, அதன் அழகை வடிவாக்கியுள்ளமைகவையானது.

ஏறத்தாழ இப்போக்கிலேயே அடிகளார் பாடல்கள் அமைந்த, காலப்போக்கில் சற்று எளிமை கொண்டன.

அவருக்குநான்மறை, பாவேந்தர் குறிப்பிட்ட"மறைநூல் என்பது தமிழ் நான்மறை நூல்"தான். அவரின் செய்யுள் படிப்பு திருவாசகத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/79&oldid=687147" இலிருந்து மீள்விக்கப்பட்டது