பக்கம்:தமிழ்மாலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

‘செந்தூரப் பூவைப் பற்றிய இயற்கை வண்ணனையும் பாடற்பொருளாகியுள்ளது.இரங்கற்பாடல்களில் அவர்தம்ஆசிரியர் சோமசுந்தர நாயகர் பற்றி அவலத்துடன் இரங்கிப் பாடிய சோமசுந்தரக் காஞ்சி' தொல்காப்பிய மரபில் அமைந்த குறிப்பிடத்தக்க இலக்கியமாயிற்று, அதற்கு மறுப்பாக ஆனந்தக் குற்றங்கூறிப் பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் போன்றோர் கருத்தெழுப்பியதையும், அவற்றிற்கு விடையாக, "சோமசுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் உரை நடைக் கட்டுரை எழுந்ததையும் குறிக்காமல் விடமுடியாது. இவையெல்லாம் 'மறைமலையடிகளார் பாமணிக் கோவை’ என்று ஒரு நூலாகப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது,

இதற்கு மேலும் குறிப்பிடத்தக்கவை அவர் தம் மொழிபெயர்ப்புப் பாடல்கள்.காளிதாசரின் சாகுந்தலத்தை வடமொழியிலிருந்துமொழிபெயர்த்த அடிகளார் அதில் 56 வடமொழிப் பாடல்களைத் தமிழில் சுவைகுன்றாது தமிழ் மரபிற்கேற்ப மொழிபெயர்த்துள்ளார். .

ஆங்கிலத்திலிருந்து பம்மல் என்னும் இதழில் வெளிவந்த தலைப்புப் பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஆங்கிலக் கவிஞன் கிரேஎழுதிய லம்பக்கஃச்? என்னும்தலைப்புடைய இயற்கைப் பாடலை வேனிற் பருவம்’ என்று பத்து விருத்தங்களாக மொழிபெயர்த்து அதற்கொரு முன்னுரையும் எழுதி வெளியிட்டார்.அதில் தமிழ் மரபிற்கேற்ப மொழிபெயர்த்துள்ளதைக் குறித்துள்ளார்.

இவை யாவும் தனிப்பாடல்கள் என்றே குறிக்கப்பெறவேண்டும்.

ஒரு தனிநூலாகச் செய்யுளில் அவர் யாத்தது"திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை"யாகும். அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறைகளில் பத்துப் பத்துப் பாடல்களில் அமைந்த மூன்று மணிக்கோவை இந்நூல். இதிலமைந்த அகவல்பாக்கள் 250 அடிவரை நெடும்பாட்டாக அமைந்து பத்துப் பாட்டின் போக்கமைப்பைநினைவுறுத்துகின்றன.

இந்நூலையாத்திட அவருக்கு ஏற்பட்ட உந்துதலும் ஒரு புதுமையானது. அடிகளார்க்கு இளமையில் கடுநோய் ஒன்று கண்டது. அது தீர்ந்தமை கருதி இக்கோவை எழுந்தது. தம்மை வருத்தும் நோய்தீரக் கடவுளைப் பாடி நோய் நீங்கினோர் கதைகள் பல உள்ளன. ஆனால், அடிகளார் தம்மைவாட்டியநோய் நீங்கிய ஒன்றரை ஆண்டுகளில் பின் இந்நூலை எழுதினார். இது புதுமை, இதனை நன்றிநவிலல் கோவை’ எனலாம்.

அடிகளார் தம் பாடல் நயத்திற்கு இருவகையை எடுத்துக்காட்டலாம். உவமைக்கு ஒன்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/81&oldid=687149" இலிருந்து மீள்விக்கப்பட்டது