பக்கம்:தமிழ்மாலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மழுங்கிய கருவிகளைக்கூர்மையாக்கச் சாணைக்கல் என்றொன்று பயன்படுத்தப்படுவதை அறிவோம். அக்கல் ஒருவகை இறுகும்பிசின் என்னும் பயின் சேர்த்து உருவாக்கப்படுவது சாணை பிடிப்பவன் அக்காலத்தில் 'காரோடன்' எனப்பெற்றான். இவனது கல்லைப் பிரியாத அன்பின் பிணைப்பிற்கு உவமை கூறினர்.

“சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போல் பிரியலம்' "

என்று சங்கப்புலவர் மாமூலனாரும்,

“சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற்போல் நாவினேன்' "

என்று அகப்புலவர் பரணரும் ஒருமிக்கப்பாடினர். இக்கருத்தை எடுத்தாளும் அடிகளார்,

“பயினொடு சேர்த்திய கற்போற்றுணையைப் பயிர்ந்தகுரல் குயில்" என்று குயிற்பேடையின் அன்பிற்குப்பாடி மகிழ்ந்தார்.

சிறப்பாகக் குறித்தால் அடிகளார் தம் பாடல்களின் படைப்பால் ஞானசம்பந்தர் பாடிய கவிதைப் புலவராகவும்" திகழ்கிறார்.

4. அளவையில் (3 நூல்கள்)

“ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு'

என்ற வள்ளுவம் அளவைநூல் படிப்பு பற்றிக் குறிப்பதைப் பரிமேலழகர் பின்வருமாறு விளக்கினார்: -

“சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க” "அளவைநூல் சொல்நூல் கற்றே கற்றல் வேண்டுதலின்" இவ்விளக்கத்திற்கேற்பப் புலவரான அடிகளார் அளவை நூல்களைக் கற்றறிந்தார்.

தவறான கருத்துக்கள், மாறுபட்ட முரண்பட்ட கருத்துக்கள் எழுந்தால் அவற்றை மறுக்கும் அளவறிந்து கருத்தால் மோதும் கருத்துப்போரே அளவையியல் ஆங்கிலத்தில் இதனை Logic என்றும் வடமொழியில் தருக்கம் என்றும் குறிப்பர். அடிகளாரின் இந்த அளவை அறிவு பயன்படும் ஓர் உந்துதல் நேர்ந்தது. நாகையின் சைவசித்தாந்த சபையில் சைவப்புலவர் சோமசுந்தர நாயகர் ஆற்றிய சைவ சித்தாந்தக் கருத்துக்களை மறுத்து ஒரு வடமொழி மாயாவதி ஸ்ஜ்ஜன பத்ரிகா என்னும் இதழில் எழுதினார். அதனை மறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/83&oldid=687151" இலிருந்து மீள்விக்கப்பட்டது