பக்கம்:தமிழ்மாலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

நாகையில் வெளிவந்த நீலலோசனி முருகவேள் என்னும் புனைபெயரில் எழுதினார் அடிகளார். அம்மறுப்பு அளவை நூல் வழியில் தற்சார்பு நெறி தர்க்கநெறி என்னும் வகைகளில் நிறைவாக அமைந்து வென்றது.

'அகர முதல என்னும் முதற்குறட்பாவிற்கு மாயாவாத நெறியில் விளக்கம் எழுதப்பட்டதை மறுத்து முதற்குறள் வாதநிராகரணம்' என்றொரு அளவையில் கட்டுரை எழுதினார். அதில் சைவ சித்தாந்தக் கருத்தை நிலைநாட்டினார்.

இவையெல்லாம் அடிகளார்தம் 21-வது அகவையில் நேர்ந்தவை. "மெய்கண்ட சில தூசன நிக்கிரகம்” என்னும் கட்டுரையும் அளவையியல் நெறிகொண்டது.

அவ்வையாரின் தேவர் குறளும் என்னும் வெண்பாவிற்குச் சபாபதி நாவலர் எழுதிய விளக்கத்தை மறுத்து அடிகளார் மலிமொழிப் பிரகாசிகை என்று எழுதியதைக் கண்போம்.அக்கட்டுரைநூலும் அளவையியல் நெறியில் அமைந்ததே.

நம் சித்தாந்த ஆசிரியர் சோமசுந்தர நாயகர் புகழுடம்படைந்தபோது அடிகளார்.அவலத்துடன் சோமசுந்தரக் காஞ்சி' எழுதினாரன்றோ? அதில் ஆனந்தக் குற்றம் கூறி ஒருவன்மையான மறுப்பு எழுந்தது.அதற்கு மறுப்பாக ஒருநிறைவான கருத்துப்போர்நூலாகச் சோமசுந்தரக்காஞ்சியாக்கம்'என்னும் முழு அளவிலான அளவையியல் நூலை வழங்கி அளவையியலில் தனிப்பதிவைப்பொறித்தனர் அடிகளார்.

மெய்கண்ட சிவதுாசன நிக்ரகம் என்பதொரு கட்டுரை அளவையியல் நூல் அடிகளார் தம் இக்கருத்துப்போரின் வன்மையையும் வெற்றியையும் பாராட்டிப்பாவேந்தர்.

"பொருண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லாசிரியன்'

என்று பாடியுள்ளார். அடிகளார்தம் அளவையியல்நூல்கள் மூன்று. 5. சமயவியல் (9 நூல்கள்)

அடிகளார்க்குச் சைவ சமயம் உணர்வின் அணுக்களிலெல்லாம் செறிந்தது. அவ்வுணர்வுப் போக்கிலேயே செல்லாமல் அறிவார்ந்தவழி இயங்கியது. அதிலும் பகுத்தறிவார்ந்த நெறியில் இயங்கியது.அதனால்தான் அடிகளார் சைவம் ஜம்புலன்களின் உணர்வு முழக்கம் என்று முன்னர்க் குறிக்கப்பட்டது.

அவர்தம் பேச்சில் எழுத்தில் ஏன் உரையாடலிலும் சிவ எண்ணமே மிளிர்த்தது. அவர்தம் எழுத்தைத் தொட்ட இடமெல்லாம் சைவமே பட்டொளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/84&oldid=687152" இலிருந்து மீள்விக்கப்பட்டது