பக்கம்:தமிழ்மாலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

வீசியது. சமயம் என்பதற்கும் சிவம் என்பதற்கும் அவர் தந்த விளக்க உரை நோக்கத்தக்கது.

'சிவம் என்றால் 'அழியாப்பொருளாய் எல்லா உயிர்கள் மாட்டும் தொன்றுதொட்டே உள்ளது "சமயம் என்பதற்குக் "காலம், நேரம், அவசரம்” என்னும் பொருள்களை வைத்து நேரம் என்னும் பொருளிலேயே சமயத்தை அறிவித்தார். இது அவர் விளக்கத் தொடர்:

'சிவம் எப்பொருளும் கடந்த பெரும்பொருளை ஆராய்ந்த நேரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று" இதில் ஆராய்ந்த நேரம் என்று குறித்தார். நேரத்தைச் சமயம் என்றதுமட்டுமன்று, ஆராய்ந்த என்னும் சொல்லைப் பெய்து ‘கடவுளைப் பற்றியெல்லாம் ஆராயக்கூடாது; அது பாவம் என்போரை மறுப்பது மட்டுமன்று பகுத்தறிவுப் பார்வையிலும் காணலாம் என்று புதுமை காட்டியதுமாகும்.அவர் அறிவார்ந்த உணர்வில் சைவம் ஒன்றே சமயம்.

இந்தியாவில் அதிலும் தென்னாட்டில் ஆரியம், பெளத்தம், சமணம், மாயாவாதம், வைணவம் என்னும் எல்லாம் வந்து புகுந்தன என்றார். இவற்றையெல்லாம் இந்து மதங்கள் என்று சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து சமயம் என்பது சைவம் ஒன்றே என்பதே அவர்தம் உறுதியான கருத்து. இதனை இந்து சமய உண்மை’ என்னும் கட்டுரையில் ஆணிப்பாய்வாகநிறுவியுள்ளார்.

'சைவம் தமிழ் மண்ணிலேதான் தோன்றியது: தமிழ் நெறிகளில் சமைந்ததுதான் சைவம்' என்பதில் அவர் ஊன்றிநின்றார். அறிஞர் சி.யு.போப் பெருமகனார் சைவம்பற்றி ஆய்ந்து,அதன் முடிவாக ஒரு கருத்தை எழுதினார்:

“சைவ சித்தாந்தம் தென்னிந்தியாவில் மிகப்பரவலாக உள்ளது; மிகச் செல்வாக்காக உள்ளது. இந்தியச் சமயங்களில் உயிரோட்டமுள்ள பெருமதிப்பிற்குரிய சமயம் சைவமே என்பதில் ஐயமில்லை”

என்றவர்,

"தென்னிந்தியாவில் தனிப்பெருஞ் சைலம் தமிழ்ச் சைவம். இது வரலாற்றுக் காலத்திற்கு முந்தியது. ஆரியர் வருகைக்கு முற்காலத்திலேயே சைவம் தமிழர் உள்ளங்களில் பிடிப்புள்ள நிலையில் ஆட்சிகொண்டது

என்றார்.இக்கருத்தில் ஆழமாக மனம்பற்றினார் அடிகளார்.

சைவம் தமிழ் மண்ணில் பிறந்தது என்பதற்கு அழுத்தமான சான்றாகத் தொல்காப்பியம் காட்டும் கொடிநிலை, கந்தழி, வள்ளி' என்னும் மூன்றையும் கொண்டு நச்சினார்க்கினியர் விளக்கும் கருத்திற்கு இசைந்து நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/85&oldid=687153" இலிருந்து மீள்விக்கப்பட்டது