பக்கம்:தமிழ்மாலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

அதற்குமேலும் விளக்கங்கண்டு சைவ சமயம் இயற்கைச் சார்புடையது. இயற்கையின் விளைச்சல் கதிர் என்கின்றார்.

அகத்திணை என்னும் ஒழுக்கம் தமிழர் தனிப்பண்பு. அதில் காதல் வாழ்வு அடித்தளம். இந்த இயற்கைப் பாங்கில் வளர்ந்து விளங்குவதே சைவ சமயம் என்கின்றார்.தமிழியற்கைக் கடவுளைக் குறித்து,

“கொடிநிலை என்னும் கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர்', “கந்தழி என்னும் ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்', "வள்ளி என்னும் தண்கதிர் மண்டலம்' என்றெல்லாம் நச்சினார்க்கினியர் தந்துள்ள விளக்கத்தை ஏற்று ஞாயிறாக, அருவாக, நன்மதியமாகக் காணும் இயற்கையை ஆராயம் சமயமே சைவம் என்கின்றார் அடிகளார்.இம்மூன்றையும்,

"மாணிக்கவாசகர் உண்மையான் உணர்ந்தனர்" என்று சான்று காட்டுகின்றார். "பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்” என்ற தனியொரு நூலும் “தமிழர் மதம்” என்ற சான்றுநூலும் இவற்றின் விளக்குகள்.

வடநான்மறையில் மனம்பற்றியவராயினும் நான்மறை என்பது தமிழில் உள்ளதே என்பதை கல்லாலின் கீழிருந்துநால்வர்க்கு உரைத்ததேநான்மறை என்கின்றார். தமிழில் வேதம் உண்டு என்பதை வடமொழி காமிகாகமம் "சிவபெருமானுக்கு வழிபாடு ஆற்றுங்கால் தமிழ் வேதங்களை ஒதுதல் வேண்டும்" என்று சொல்லுவதை எடுத்துக்காட்டிவிளக்கியுள்ளார்.

“வேதம் சாமானிய நூல்; சிவாகமம் விசேட நூல்' என்பது அடிகளார் கோட்பாடு.

சித்தாந்தம் என்பது சைவ சித்தாந்தந்தான் என்றும் சமரச சன்மார்க்கம் என்பதும் சைவ சமய நெறிதான் என்பதை ஒரு தனி விளக்கமாகவே தந்துள்ளார். சமரசம் என்பதற்கு அடிப்படைதீவினைப் பயன்களை அறிவினால் அகற்றுவதே என்று காட்டிஅதுதான் உண்மைச் சைவம் என்றுள்ளார்.

இதன் தொடர்பிலேயே அறிவெல்லாம் உருகத்தைப்பற்றியே அழியாது நிற்கும்” என்னும் ஒரு கோட்பாடு படைத்து உருள் அழிபாடு பற்றிய கருத்தை வடிக்கிறார்.

வடவர் கொள்ளும் உருவ வழிபாடு கை 41ல், தலை, உடம்பு கொண்ட ம்ே விக்கிாக வழிபாடு. அது

உடலுருவ வழிபாடு: அஃதாவது அவர் :ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/86&oldid=687154" இலிருந்து மீள்விக்கப்பட்டது