பக்கம்:தமிழ்மாலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ஏற்கத்தக்கதன்று என்று விலக்கி அருவுருவ வழிபாட்டைவற்புறுத்துகின்றார். அருவுருவமாவது இலிங்க வடிவம்.

தீயை வைத்துத் தீயுருவில் சிவனை வழிபட்ட தமிழர், அவ்வுருவில் கல் லமைத்து வழிபட்டனர். அவ்வுருவே இலிங்கம் என்னும் அருவுருவம். தீப்பிழம்பின் வடிவமே இலிங்கம் என்று விளக்குகின்றார்.

- ஆனால், நாம் வழிபடும் அம்பலவாணர் திருவுருவத்திற்கு விளக்கந் தருகின்றார். இது சற்று ஏற இறங்கக் காணற்குரியதாகின்றது. தம் பழக்கப் பாங்கிற்கு ஒர் அமைதி சேர்க்கிறார் என்றே என்போன்றோர் கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்றே அம்மையப்பர், உருவத்திற்கும் உள்ள கதைகளையெல்லாம் பொய்யென்று தள்ளிவிடுபவர் கதிரவனையே மூலமாக வைத்து, அது தரும் நிறம் ஏழு ஏழு நிறங்களில் மூலநிறங்கள் இரண்டு; அவை தீப்பிழம்பின் சிவப்பும் தீக்கருவின் நீலமும் ஆகும்.இவ்விரண்டின் உருவகமாக அஃதாவது, சிவப்பு, சிவன்; நீலம் உமை என்னும் அம்மை என்று காட்டுவதும் ஒருவகை அமைதி காண்பதேயாகும்.

இருப்பினும் இவ்வுருவங்களுக்குக் கட்டப்பெற்ற கதைகள் எல்லாம் பொய்க்குட்டைகள் என்றே ஒதுக்குகின்றார்.இருப்பினும் இவற்றைப் படைத்த பலரில் சிலர் அறிவுச் சான்றோராகவும் திகழ்ந்ததை உணர்ந்து,

“இப்புராணக் குப்பைக் குவியல்களிற் பழம்புராண உண்மைக் கருத்துகளாகிய விழுமிய மணிகள் சிற்சில புதைந்து கிடக்கின்றன.' என்று இசைந்து போகிறார். இஃதும் அடிகளார் சான்றோர்க்குத் தந்த பெருமதிப்பு என்றே கொள்ள வேண்டும்.

மேலும் முருகன்பால் நீங்காப்பற்றைத் தொடக்க காலமுதல் கொண்டுள்ளார். முதலில் எழுதத் துவங்கியபோதே கொண்ட புனைபெயர் முருகவேள் நோய்தீர்ந்தநன்றியில் பாடியது திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை, தாம் நிறுவிய அச்சகத்திற்கு இட்ட பெயர் திருமுருகன் அச்சகம். முருகன் உருவிற்கு எழுஞாயிறாம் உருவகம் கூறியிருப்பினும் முருக வழிபாட்டை ஏற்றே நிற்கிறார். ஆனாலும், கந்தபுராணம் புளுகுப்புராணம் என்றும் சாடியுள்ளார்.

“பாருங்கள் அன்பர்களே! இப்புதுக் கந்தபுராணப் புளுகுகள் முழுமுதற் கடவுளான சிவத்தின் நிலைக்கு எவ்வாறு மாறுபட்டனவாயிருக்கின்றன.'

என்பது சாடலில் ஒன்று.

முடிவாக, சமயக் கொள்கையில் அவர் படைத்த எட்டு நூல்களின் பெயர்களே அதன் சாறுநிறைந்த கிண்ணங்களாகத் தோற்றமளிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/87&oldid=687155" இலிருந்து மீள்விக்கப்பட்டது