பக்கம்:தமிழ்மாலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஆய்விற்கு அவ்வம்மொழியில் உள்ள சொற்களே கால அறிவிப்புச் சான்றுகளாகும் என்னும் கொள்கையைக் கொண்டவர் அடிகளார். அதன்படி சொற்களை விளக்கிக் கால எல்லைகளை வகுத்தார்.

வடமொழியில் வியாசபாரதம் ஒரு கால எல்லை காட்டும் நூல். அதில் தொடர்புள்ள சேர மன்னன் உதியஞ்சேரல் இரு படைக்கும் உணவளித்தவன் என்பது தமிழ் இலக்கியங்களிலும் பேசப்படுவதாகும். இப்புராதனக்காலத்திற்கு முந்தியது தமிழில் பண்டைக்காலம் என்றும் வடமொழியில் வேதகாலம் என்றும் கொள்ளப்படும் என்று கண்டு கூறினார்.

வடமொழி இலக்கண ஆசிரியராகிய பாணினியின் அட்டாத்தியாயி என்னும் நூலுக்கு அகல உரை தந்த பதஞ்சலியின் காலம் கி.மு.150 என்று வடமொழி வல்லுநர்கள் வகுத்துள்ளனர். அதனையும் துணையாகக் கொண்டு பாணினியின் காலம் கி.மு. 900 என்று நிறுவினார். பாணினிக்கு 400 ஆண்டுகளுக்கு முந்தியவர் தொல்காப்பியர் என்று தம்முள் எல்லை வகுத்து, குமரி நிலம் பற்றிய நிலை இலங்கைப் பெளத்த வமிசாவழி குறிப்பைக் காட்டி விவிலிய நோவா காலமும் காப்புத் தொல்காப்பியன் காலம் கி.மு.2400 என்று துணிந்து கூறினார். -

அடிகளார் ஆய்வில் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூல் 1075 பக்கங்களைக் கொண்ட நிறைவான நூல்.

நாம் வழிபடு கடவுளுக்கு நேராக வைத்துப்போற்றும் மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்து முடிவுகட்டும் இந்நூல் ஆய்வு நெறிகளை அறிவிக்கும் நூலுமாகும்.

மணிவாசகர்கால ஆராய்ச்சிக்கு அடித்தளமானது நரியைப்பரியாக்கிய நிகழ்ச்சிதான். இதனை வைத்துப் பலவாறாக எழுதி மாணிக்கவாசகர் காலத்தைகி.பி.11-12ஆம்நூற்றாண்டு என ஆய்ந்து எழுதியவர்பலர். அவருள் குறிப்பாக பித சீனிவாச ஐயங்கார், கோபிநாதராவ்,போப்துரைமகனார், லிங்க துரைமகனார் முதலியோர் எழுதியவற்றை வன்மையாக மறுத்து எழுந்ததே. இந்நூல்.

'நரியைப் பரியாக்கிய சிவபெருமான் அருள் நிகழ்ச்சி மணிவாசகர்க்காக நிகழ்ந்தது. இதனைச் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் தொகை குறிக்காமைக்குக் காரணமாக முன்னிருந்தநக்கீரர், பரணர், அன்வையார் முதலியோரைப் பாபது விட்டது போன்றே விட்டு 'பொய்யடிமை இல்லாப்புலவர், வரிசையில் பணிவாசகரையும் வைத்தார் என்று

நாட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/89&oldid=687157" இலிருந்து மீள்விக்கப்பட்டது