பக்கம்:தமிழ்மாலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌も

திருவள்ளுவர் சைவர் என்றும், 'அவர் சித்தாந்தம் சைவ சித்தாந்தம் என்றும் அவர் காட்டும் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்த பண்புகள் Tಧ! அவை தமிழர்க்கே உரியனவாயினும் உலகோர் கடைப்பிடிக்கத்தக்கது என்றும் உலகப் பெருநூல் திருக்குறள் என்றும் நிறுவியுள்ளார். -

இவ்வாய்வுகளின் பயனாய்த்தான், “கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்கு சான்றும் கிடைக்கவில்லை” என்று திருவள்ளுவர் காலத்தை வரையறுத்து அறிவித்தார்.இம்முடியுஇன்று அரசாலும்கற்கப்பெற்று நடைமுறையில் உள்ளது மகிழ்விற்குரியது.

அடிகளார் ஆய்வுநெறி கூர்த்தது; குலையாதது தெளிவும் தேற்றமும் கொண்டது; நெளிவும் நீற்றலும் கொண்டதன்று. பகுத்தறிவு வழி கொண்டது; பட்டுப்போகும் புராணவழி கொண்டதன்று.இவற்றால் அவர் கண்டுநாட்டியுள்ள முடிவுகள் இவை:

i.

2.

3.

8.

9.

10.

உலக முதல்மொழி தமிழே.

தொல்காப்பியர் காலம் கி.மு.2400. எழுத்தில்லாத வடமொழி தமிழ் எழுத்துக்களைக் கண்டே எழுத்துக்களை வகுத்துக்கொண்டது. வட உபநிடதம், பிரமாண்யம் முதலிய பல நூல்கள் வடமொழி பயின்ற தமிழாசிரியரால் எழுதப்பட்டவை. தமிழ் நூல்களைப் படித்து அவற்றின் கருத்துக்களை இரவல்களாகப் பெற்றுப்பல வடமொழி நூல்கள் எழுதப்பெற்றன. தமிழர் சைவமே முதற்சமயம் முழுச் சமயம். மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. நாடக நூல்கள் முதன்முதலில் தமிழாசிரியர்களால்

蟾LáöL儿儿_L茹,

வேதம் சாதாரணமானது சைவம் விசேடமானது. திருவள்ளுவர் ஆண்டு கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளின் முன்னது.

இப்பத்துக் கட்டளை முடிவுகளால் தமிழரும் அவர் வழி உலகோரும் அறிவுப் பயனும் வாழ்வச் சிறப்பும் கொள்ளலாம்.

அடிகளார் தம்ஆய்வில் ஆய்வுமுடிவில்வை உறுதிகொண்டவர். புதிது படைக்கிறேன் என்னும் புலமைப்பெருமிதம் கொண்டவர்.தமிழர் ஆரியர் ஒப்பீடு செய்தவர் இவ்வாய்வு கீழ்த்திசை வரலாற்றுக்கும் புதுமையானது' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/93&oldid=687161" இலிருந்து மீள்விக்கப்பட்டது