பக்கம்:தமிழ்மாலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

৪ Z

அசைக்கமுடியாத முடிவுகளை வைத்தவர் என்பதை அவரது சொற்களே

கல்லெழுத்தாக்குகின்றன:

18 ஆண்டுகளுக்கு முன் வரைந்துள்ள கருத்துக்கள் மேன்மேல் ஆராய்ச்சிகளால் உரம்பெற்று வருகின்றனவேயல்லாமல் அவை சிறிதும் மாறுபடவில்லை'."

7. நாடகவியல் (2 நூல்கள்)

“உலகவியற்கை மக்களியற்கையோடு மாறுகொள்ளாவாறு நாட்கநூல்யாக்கும் வகைகளை விரித்து விளக்கிய தொல்காப்பியம், இறையனாரகப் பொருளுரை முதலான பண்டைத் தமிழ் நூல்களின் ஆசிரியர்களும் அவர் வழி பிழையாது போந்து கலித்தொகை, அகநானூறு, திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான நாடகத் தமிழ்நூல் யாத்த நல்லிசைப் புலவர்களும்" என்றுநாடகத்தமிழ்நூல்கள் பற்றி ஆய்ந்தறிவித்தவர் அடிகளார்.

நாடகம் உண்மைக்கூறுகளை உரையாடல், உணர்ச்சி வடிப்பு, உணர்வார்ந்த செயல்கள், ஒன்பது சுவைகள் முதலியவற்றின் மூலம் வெளிப்பாடாக்குவதே.ஒப்பனை இன்றியமையாதது என்றாலும் ஒப்பனையின்றி நாடகம் சிறப்பதும் உண்டு. ஒப்பனையுடன் நடித்துமாதவி ஆடிய வரிக்கூத்தும், மாற்று ஒப்பனையின்றி இயல்பான நாளிட்டு ஒப்பனையுடன் உரையாடிய அகப்பொருள் உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளும் நாடகப்பாங்குகளே. கலித்தொகையின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஒருறுப்புநாடகமன்றோ? திருக்குறள் காமத்துப்பாலின் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு சிற்றரங்க நாடகமே.

அடிகளார் நாடக இலக்கியங்களில் மனம் ஊன்றியவர். அவர்தம் 20 ஆவது அகவையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அழைப்பில் திருவனந்தைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மும்மொழிகளிலமைந்த நாடக நூல்கள் கற்றுத் தேர்ந்த அடிகளார் முன்னர் கண்ட சென்னைச் சொற்பொழிவின் நிகழ்ச்சியால் உந்தப்பெற்றுக் காளிதாசரின் சாகுந்தலத்தை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து யாத்தார். மூல அமைப்பின் சுவையும், ஆசிரியர் வடிப்பு நெறியும் மாறாமல் இந்நாடகநூலை எழுதினார்.இடையிடேயே காளிதாசரின் வடமொழிச் செய்யுள்களைத் தமிழ் யாப்பில் அமைத்துப் பாட்டிடையிட்ட உரையாடல்நாடகமாக உருவாக்கினார்.

இதன் சிறப்பை அறிந்த தவத்திரு சங்கராச்சாரிய அடிகளார்.இதனைப் பாராட்டி மாணவர்க்கும் பரிசு நல்கும் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார் என்பதை ஆழமாக நினைந்து இந்நூலின் சிறப்பைக் கணிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/94&oldid=687162" இலிருந்து மீள்விக்கப்பட்டது