பக்கம்:தமிழ்மாலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மாயாவாதி என்று அடிகளாரால் கண்டிக்கப்பெற்ற பீடத்துச் சங்கராச்சாரியார் பாராட்டு என்றால் ஆழமாகத்தானே நோட்டப்பட வேண்டும்?

இந்நாடக நூல் தமிழுக்கு நல்ல அன்பளிப்பு.

இரண்டாவதாகவும் நிறைவாகவும் அடிகளார் எழுதிய நாடகம் 'அம்பிகாபதி அமராவதி நாடக நூலாகும். இதற்கும் ஒர் உந்துதல் உண்டு. அடிகளார்தம் 2212.1938நாட்குறிப்பில் இதுபற்றி எழுதியுள்ளார்.கோவிந்தராச முதலியார் என்பவர் தாம் எழுதிய அம்பிகாபதி’நாடகத்தினைப்பார்வையிட்ட அடிகளார் அது, சுவையின்றிக் கலைத்தன்மையின்றி ஆர்வமூட்டலின்றி அமைந்திருந்ததைச் சுட்டி எழுதி"அம்பிகாபதிபற்றி புதியநாடகம் நானே எழுத எண்ணியுள்ளேன்” என்று பதிந்ததற்கேற்ப இந்நாடக நூல் உருவாயிற்று.

இக்கதை வரலாற்று நிகழ்ச்சியின் ஒரு கூறு. கம்பர் மகன் அம்பிகாபதிக்கும் சோழன் மகள் அமராவதிக்கும் நேர்ந்த காதல் ஆழமும், அதனால் அம்பிகாபதி அரசன் ஆணையால் வெட்டுப்பட்டுக் கொலையுண்ட துன்பமும் கதைப்பொருள். -

“சற்றே பருத்த தனமே" என்று தொடங்கித் “தலையலங்காரம் புறப்பட்டதே'

என்று முடியும் அம்பிகாபதியின் பாடலும்,

“பட்டுப்பட் டாயினும் தேறுவை என்று பார்த்திருந்தேன் வெட்டுப்பட்டாய் மகனே முன்னாளின் விதிப்படியே'

என்றும்,

“வில்லம்பு பட்டதா என்மார்பில் பார்வேந்தே, நின்குலத்தைச்

சுட்டதாடா என்வாயில் சொல்'

என்றும் பாடிய கம்பரின் தனிப்பாடல்களும் சான்றாகுகின்றன. இவற்றின் அடித்தளத்தில் அமைந்தது நாடகக் கதை. இப்பாடல்கள் அம்பிகாபதியாலோ கம்பராலோ எழுதப்பட்டனவா என்று கருதுதற்கு இடமுண்டென்றாலும் அடிகளார் இக்கதையில் மனம் பற்றினார். கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்றும் நிகழ்ச்சியைத் தடுக்கப் புலவர் ஒட்டக்கூத்தரைப் பயன்படுத்தியுள்ளார் அடிகள். இது அடிகளாரின் வையவக் கதை எழுதி கம்பன்மேல் காட்டும் எதிர்ப்பின் வெள்ளோட்டங்களில் ஒன்று என்று கொள்ளலாம். ஆனால் வன்மைப் புலவனாகிய ஒட்டக்கூத்தன் இக்கதையின் வில்லனாக்கப்பட்டுள்ளதால் அடிகளாரால் இராமாயண அரங்கேற்றத்தைத் தடுக்கும் வில்லன் ஒட்டக்கூத்தர். அதனால் காதலையும் கொலைக்குள்ளாக்கும் குற்றமும் நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/95&oldid=687163" இலிருந்து மீள்விக்கப்பட்டது