பக்கம்:தமிழ்மாலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

ஆனாலும் இந்நாடக நூல் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ்ப் படைப்பு. தமிழுக்கு அடிகளார் தந்த பரிசு.

இன்பியலுக்கு ஒரு சகுந்தலை நாடகம் துன்பியலுக்கு ஒர் அம்பிகாவதி அமராவதி. ஆனாலும் பதியும் வதியுமாக அமைந்த ஆண்,பெண்பெயர்கள் அடிகளாரைத் தனித்தமிழ்க் கோட்பாட்டிலிருந்து சற்று நகர்த்தி வைக்கின்றன. வரலாற்று வழங்குபெயர் என்று கொண்டார் போலும்,

8. உளவியல் (4 நூல்கள்)

உளவியல் என்று இங்கே குறிக்கப்பெறுவது மேலைநாட்டில் வளர்க்கப்பட்டுவரும்"மெஃச்மரிசம்,இப்னாட்டிசம்' என்னும் கலைகளேயாகும். அறிவை மயக்கி உள்ளத்தை வயமாக்கும் கலையாகையால் உளவியலில் இஃது அடங்கும்.நம் முந்தையர் இக்கலையில் கைவந்துள்ளனர். எட்டுமாசித்திகள், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஞானத்திட்டி, வசியஞ் செய்தல், என்றெல்லாம் வழங்கப்பெற்றது.இக்கலை.இடைக்காலத்தில் தமிழ்ச்சித்தர்கள் இக்கலையால் செயற்பட்டு வியத்தகு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினர் என்பர். அடிகளாரும் இக்கலை பயின்று தம் மகனுக்கு இளைப்பிருமல் நோய் கண்டபோது அறிதுயில் செய்து இந்த நோயைக் குறைத்தார் என்பர்.

மரணத்தின் பின் மனிதர்நிலை','யோகநித்திரை அல்லதுஅறிதுயில், 'மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி', 'தொலைவிலுணர்தல் என்னும் நான்கு நூல்கள் இக்கல்ைகளின் படைப்பு. திருக்குறள், திருமந்திரம், திருக்கோவையார் முதலிய தமிழ் நூல்களிலிருந்து இவற்றிற்குச் சான்று விளக்கமும் தந்திருப்பது அடிகளாரின் நுண்ணறிவின் வெளிப்பாடாகிறது. இக்கலைநூல்களைக் கல்விநூல் என்றுள்ளார்.

காதலர் உளக்கவர்ச்சி இதனால் விளைகிறது என்றும், மரஞ்செடி கொடிகள் யானை முதலிய விலங்குகள்பால் இவ்வுணர்ச்சிகள் தென்படுகின்றன என்றும் சுட்டி விளக்கியுள்ளார். முன்பிறவியில் நிகழ்ந்தவற்றையும்,உடன் காலநினைவுகள் தொலைவிடங்களில் உள்ளார்க்கும் நமக்கும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன என்பதையும் பொருத்திக்காட்டுகின்றார். ஆங்கில நூல்களிலிருந்தும் உலகநிகழ்ச்சிகள் பலவற்றிலிருந்தும் சான்றாகப் பலவற்றைப் பொருத்தியுள்ளார்.இவையெல்லாம் இக்காலத்தும் நம்பயிற்சியால் கைவரப்பெறலாம் என்று அறிவுறுத்துகின்றார்.

ஐம்புலங்களுக்கு எட்டாத உருவத் தோற்றம் தொலைவிலுணர்தலால் நிகழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/96&oldid=687164" இலிருந்து மீள்விக்கப்பட்டது