பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


பரணர் முதலியோர்க்கும் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டராவர் என்பது திண்ணம் (பக். 172-178) என்று வரைந்திருத்தல் கவனத்திற்குரியது.

தொல்காப்பியர் இன்றுள்ள சங்க நூல்கட்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதைப் பேராசிரியர் மு. இராக வையங்கார் அவர்கள் பல சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அவற்றைப் படித்து உண்மையுணர்தல் நல்லது (ஆராய்ச்சித் தொகுதி, பக். 101-120).

இதுகாறும் காட்டப்பெற்ற அகச்சான்றுகள் அனைத்தும் தொல்காப்பியர், புறநானூறு போன்ற சங்க நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் என்னும் உண்மையை ஐயமற விளக்கி நிற்கின்றன என்பதை நன்குணரலாம். இம்முடி வினையே வேறு சில புறச்சான்றுகளும் ஆதரித்து நிற்றலைக் கீழே காண்க. புறச் சான்றுகள்

(1) பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.

வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’’ இவ்வரிகளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள். குமரி என்பதைக் குமரியாறு எனவே கொண்டனர்.

(1) கடல் கொள்வதன் முன்பு பிற நாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது, கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின’’ என்பது இளம் பூரணர் தரும் விளக்கமாகும். அதுதானும் (தொல்காப்பியமும்) பனம்பாரனார் "வடவேங்கடம் தென்குமரி எனக் குமரி யாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல் காப்பியம், மரபியல், நூற்பா 94 உரை) என்று பேராசிரியர் குறித்துள்ளார்.