பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

முதன் முதலாகத் தமிழகத்தில் பெளத்த சமயம் நுழைந்து பரவத் தொடங்கியது என்னும் உண்மை வெளியாகிறது.

தமிழகத்தில் கழுகுமலை முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்தருடைய பிராமிக் கல்வெட்டுகள் கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை என்பது ஆராய்ச்சி அறிஞர் முடிபாகும். பெளத்தம் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்தில் சிறிதும் இல்லை. [1] எனவே தொல்காப்பியம் தமிழகத்தில் பெளத்தம் நுழைவதற்கு முன்பு செய்யப்பட்ட தென்னலாம்.

பனம்பாரனார் பாயிரம்,

"ஐந்திரம் கிறைந்த தொல்காப்பியன்"

என்று கூறுகின்றது. ஐந்திரம் என்பது வடமொழியில் சிறந்து விளங்கும் பாணினீயம் என்னும் இலக்கணத்திற்கு முற்பட்டது என்பது வடநூற்புலவர் கருத்து. தொல்காப்பியர் அப்பழைய வடமொழி இலக்கணத்தை நன்கு படித்தவர் என்று பனம்பாரனார் தம் பாயிரத்தில் பாராட்டியுள்ளார். பாணினீயம் வந்த பிறகு ஐந்திரம் மறைந்து விட்டது தொல்காப்பியர் பாணினிக்குப் பின்பு வந்தவராயின் , அந்நூலையே. கற்றுச் சிறப்படைந்திருப்பார்; 'பாணினீயம் நிறைந்த தொல்காப்பியன்' என்றும் பெயர் பெற்றிருப்பார். அவர் அங்ஙனம் குறிக்கப் பெறாமையால், பாணினி காலத்திற்கு


  1. “The famous Tamil grammatical work, the Tolkappiyam, may be assigned to the period (B.C. 325– B.C.188) under survey; it is said to exhibit the influence of Aindra Vyakarana, a pre-Panini system of Sanskrit grammar, but it is free from Buddhist influence.”
    -R. Sathyanatha Ayyar, History of India,
    Vol. i., pp. 170–171.