பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஒரு முத்தின் வகையைக் குறிப்பிட்டுள்ளான். அது பாண் டியாது கபாடபுரத்துக் கடல் முத்தே என்பது தெளிவு. கபாடபுரம் அழிந்த பிறகு அந்நகரின் பெயரைக் கூட்டி அக் கடற்பகுதியில் கிடைக்கும் முத்திற்குப் பெயர் வழங்கினர் என்று கூறுதல் ஏற்புடையதாகாது. கபாடபுர அழிவிற்குப் பின்பு கொற்கை முத்தே தொகை நூல்களில் பேசப்படுகின் றது காண்க.“ எனவே, கி. மு. 4ஆம் நூற்றாண்டில் கபாடபுரம் இருந்தது என்று கொள்வதே பொருத்தமாகும்.

"இலங்கையில் தோன்றிய மூன்று கடல் கோள்களுள் முதற் கடல்கோள் கி. மு. 2387இல் இலங்கையை இந்தியா வினின்றும் பிரித்தது; இரண்டாம் கடல்கோள் கி. மு. 504இல் நிகழ்ந்தது; ஆயின் குறிப்பிடத்தக்க பேரிழப்பு இல்லை. மூன்றாம் கடல்கோள், அசோகன் காலத்தில் வாழ்ந்த தேவனாம்பிரிய திஸ்ஸன் காலத்தில் கி.மு. 306இல் உண்டானது. அதனால் ஒரு லட்சம் ஊர்களும், மீன் பிடிப்பவர் வாழ்ந்த சிற்றுார்கள் 910ம் (தொள்ளாயிரத்துப் பத்தும்), முத்தெடுப்பவர் வாழ்ந்த நானூறு சிற்றுார்களும் அழிந்தன '1' என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறு கின்றன.

முதற் கடல்கோள் இலங்கையைத் தமிழகத்திலிருந்து வேறு பிரித்தது என்பதால், அடுத்து நிகழ்ந்த கடல்கோள் களும் இலங்கையைப் போலவே தமிழகத்தையும் பாதித் திருத்தல் இயற்கையேயாகும். அதனாற்றான் தென் மதுரை அழிய ஒரு கடல்கோளும், கபாடபுரம் அழிய மற்றொரு கடல்கோளும் காரணமாயிருந்தன என்று இறையனார் களவியலுரை இயம்புகின்றதுபோலும்!

12. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 87-88.

13. Sir James Emerson Tennent, Ceylon, Vol. 1 p. 7"

foot-aote. ->