பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

483 நூற்பாக்களில் தெரிவிக்கின்றார்; தமிழ் எழுத்துகள் உயிர், மெய், உயிர் மெய் , ஆய்தம் என்பன என்றும், எழுத்துகளின் ஒலி வடிவங்களும் வரி வடிவங்களும் இவை. என்றும், மாத்திரை, முதலெழுத்து-சார்பெழுத்து வகைகள், சுட்டு வினா வகைகள் இவை என்றும், சொற்களின் எழுத்து நிலை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துகள், மொழிக்கு நடுவில் வரும் எழுத் துகள், அளபெடை இன்னவை என்றும், உயிர் எழுத்து களும் மெய்யெழுத்துகளும் இன்னின்ன முறையில் பிறக்கும் என்றும் இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. மேனாட்டார் இக் காலத்தில் கூறும் ஒலிமுறைகள் தொல்காப்பியர் காலத் திலேயே தமிழில் விளக்கப்பட்டுள்ளன என்பது அறிந்து இன்புறத்தக்க செய்தியாகும். தொல்காப்பியர், சொற் றொடர்களில் சொற்கள் ஒன்றோடு ஒன்று சேருவதால் உண்டாகும் ஒலி மாற்றங்கள் புணரியல் முதலிய இயல்களில் விரித்துக் கூறியுள்ளமை படித்து வியத்தற் குரியது.

சொல்லதிகாரம்

எழுத்துகளாலாகிய சொற்களின் இலக்கணம் கூறுவதே சொல்லதிகாரம். இதனுள் கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு. பெயரியல், வினை யியல், இடையியல், உரியியல், எச்சவியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.

தொல்காப்பியர் சொற்றொடர் மரபுகளைக் கிளவியாக் கத்தில் கூறியுள்ளார்; சொற்றொடர் அமைப்புக்குப் பெரிதும் தேவைப்படும் வேற்றுமையை அடுத்துக் கூறியுள்ளார். அவர் காலத்திற்கு முன்பு தமிழில் ஏழு வேற்றுமைகளே கொள்ளப்பட்டன; விளிவேற்றுமை தனியாகவே எண்ணப் பட்டுவந்தது. தொல்காப்பியர்தாம் விளியையும் சேர்த்து வேற்றுமை எட்டு என்று கூறியுள்ளார்.