பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்என்(று) அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்பது தொல்காப்பியம்.

இவற்றுள் இயற்சொல் என்பது பேச்சு மொழிக்கு உரியது; திரிசொல் என்பது நூல்மொழிக்கு உரியது. இவை இரண்டும் ஒரு மொழிக்கே உரியவை. திசைச்சொல் என்பது ஒரு மொழியிலிருந்தே கிளைத்தது; தன்னைச் சுற்றிலும் வழங்குவது. மலையாளம் தமிழிலிருந்து கிளைத்தது. அது தமிழிலிருந்து வேறுபடும் நிலையை அடையும்போது அதன் சொல் தமிழில் ஆளப்படுமாயின் அது திசைச்சொல் எனப் பெயர் பெறும் வடசொல் என்பது வேற்றுமொழி. அது வடக்கிலிருந்து வந்து தமிழோடு தொடர்பு கொண்டதால் வட மொழி எனப்பெயர் பெற்றது. இந்நான்கு மொழிகளும் தமிழ் நூல்களில் பயின்று வருதலின் தமிழர் இதனை அறிய வேண்டும் என்று கருதியே தொல்காப்பியர் இவற்றைப் வற்றிக் கூறினார். -

வடசொல் தமிழில் வழங்கும்போது அதற்குரிய ஓசை யைத் தமிழாக்கித் தமிழ்ப்படுத்தி வழங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்து.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

சீதா : வடசொல். சீதை-வட எழுத்து நீக்கித் தமிழ் ஓசையோடு அமைக்கப்பட்டது. பிறமொழிச் சொல்லுக்குத் தமிழோசை ஊட்டுவதனால் அச்சொல் வடிவில் சிதையினும் குற்றமில்லை என்பது தொல்காப்பியர் கருத்து.

" சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' என்பது விதி. இந்த விதியைப் பின்பற்றியே விபீஷணன் என்பது வீடணன் எனவும், லகஷ்மணன் என்பது இலக்குவன் எனவும், கர்ணன் என்பது கன்னன் எனவும் தமிழில் வழங்கப்படு