பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


அளவில் ஒரு தனி நூலாக உருவெடுத்தது. நூல் அளவில் பெருகின் விலையும் மிகும். ஆதலால் யான் முதலில் விரிவாய் எழுதிய நூலை மிகத் தேவையான செய்திகளை மட்டும் கொண்ட நூலாகச் சுருக்கினேன். அங்ங்னம் சுருக்கப்பட்ட நூலே இது.

இந்நூலில் மொழியின் தோற்றம் வளர்ச்சி-இலக்கியம்-இலக்கியத் தோற்றம் என்பவை முன்னுரைச் செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. அடுத்துச் சங்ககால இலக்கியத்திற்கு இந்திய வரலாறும் இலங்கை வரலாறும் அயல்நாட்டார் குறிப்புகளும் எந்த அளவு துணை செய்கின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து முச்சங்கங்கள் வரலாறு-மதுரையில் தமிழ்ச் சங்கம் என்பவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவற்றையடுத்துத் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் காலமும், நூற் செய்திகளும் பிறவும் விளக்கப்பட்டுள்ளன.

"இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு நூலின் காலத்தையும் ஆராய்ந்து முடிவு கட்டுதல் இன்றியமையாதது. ஆயின், இக்கால ஆராய்ச்சி மட்டும் இலக்கிய வரலாறு ஆகாது. வரலாற்றில் பல காலங்கள் உண்டு ஒருகால இலக்கியத்திற்கும் அடுத்தகால இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுதல் வேண்டும். ஒரு காலத்து இலக்கிய நூல்கள் எவ்வெச்சூழ்நிலையில் உருவாகியுள்ளன என்பதும் விளக்கப்படல் வேண்டும். ஒரு காலத்துக்கு உரிய நூல்களை அக்கால அரசியல், பொருளாதார இயல், சமூகஇயல் முதலியவை எங்ங்னம் வளர்த்தன என்னும் உண்மையும் விளக்கப்படல் வேண்டும்.

“காலக் கணக்கு மட்டும் கூறுவது நன்றன்று. ஒரு மொழி பேசிய மக்களினம், அவ்வினத்துப் பிரிவுகள், அவ்வினத்தவர் தொழில்கள், வாழ்க்கை முறை இவற்றை