பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

நாட்டைக் காக்கப் போர்த் திறத்தில் சிறந்து விளங்கினர்;வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, நொச்சி-உழிளுை, தும்பை, வாகை என்னும் பல வகைப் போர் முறைகளை வகுத்துச் செயலாற்றினர்; ஒவ்வொரு போர் முறையிலும் பல துறைகளை வகுத்துக்கொண்டனர். புறத்திணையியல் இவை பற்றிப் பேசுகின்றது. போரில் வெற்றி பெற்ற வேந்தர்க்குப் புலவர் வாழ்க்கை நிலையாமை கூறி அறிவுறுத்துதல், முடிசூடல், பிறந்த நாள் விழாக் கொண்டாடுதல் போன்ற செய்திகளும் பிறவும் இவ்வியலில் கூறப் பட்டுள்ளன.

உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கு ஏற்ப உடலில் தோன்றும் வேறுபாடு மெய்ப்பாடு எனப்படும். மெய்ப்பாடுகள் சுவை பற்றித் தோன்றுவன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு வகைப்படும். இவ்வெட்டனுள் ஒவ்வொன்றும் நந்நான்கு வகைப்படும். ஆகவே இவை முப்பத்திரண்டு வகைப்படும். இவை அல்லாமல் வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் உள்ளன. இவ்வறுபத்து நான்கு மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை. களவுக்கு உரியவை, கற்புக்கு உரியவை என அகத்திற்கு உரிய மெய்ப்பாடுகள் எழுபதாக விரியும். இவற்றை நுணுகி ஆராயும் பொழுதுதான் பழந்தமிழ் மக்களுடைய மெய்ப்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி அறிவை நாம் உள்ளவாறு உணர்ந்து பாராட்டுதல் கூடும். இவை மெய்ப்பாட்டியலில் கூறப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் காலத்தில் அணி இலக்கணம் என்று. தனியாக ஓர் இலக்கணப் பிரிவு ஏற்படவில்லை. பிற்கால ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தாறாகவும் அவற்றிற்கு மேலாகவும் கூறிச் சென்றனர். அவ்வணிகள் எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குவது உவமை அணியாகும். தொல்காப்பியர் உவமையைப் பற்றி ஓர் இயலில் விளக்கி