பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

j 26 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

3. 'ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப' என்று தொல்காப்பியர் கூறுவதால், அவர் காலத்தில் உலா நூல்கள் இருந்திருக்கலாமென்று கூறுதல் பொருத்தமாகும்.

4. மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே' என்று தொல்காப்பியர் கூறலால், ஆண்கள் தலைவியரை விரும்பி மடன்மா ஏறுவதாகக் கூறிய மடல் நூல்கள் தொல் காப்பியர் காலத்தில் இருந்திருக்கலாம்.

5. அங்கதக் தானே அரில்தபத் தெரியிற் - செம்பொருள் கரந்த(து) என இரு வகைத்தே? என்று தொல்காப்பியர் கூறுவதால், ஒருவனைப் பழித்தே வைத செய்யுட்களும், பழி மறைத்து மொழியும் செய்யுட்களும் அவர் காலத்தில் இருந்தன எனலாம். இவை முறையே செம்பொருள் அங்கதம் (வசைப்பாட்டு), பழிகரப் பங்கதம் (வசை மறைத்துக் கூறும் பாட்டு) எனப்படும்.

6. எளிதில் பொருள் தோன்றாது சொற்களால் மறைய வைத்துக் கூர்ந்து நோக்கின் இன்ன பொருளையுடையது என்று அறியக்கூடும் வகையில் இக்கால விடுகதை போன்ற ஒருவகை, பிசி எனத் தொல்காப்பியர் காலத்தில் பெயர் பெற்றிருந்தது. அது உவமத்தாலும், தோன்றுவது கிளந்த துணிவினாலும் வரும்; செய்யுள் வடிவிலும் உரை நடை வடிவிலும் வரும். இப்பிசி பற்றிய நூல்கள் இருந்தமை பற்றியே தொல்காப்பியர் இதனைக் குறித்தார்.

" ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும்

தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிவகை கிலையே. ' 8. முதுமொழி அல்லது பழமொழி என்பது இலக்கிய வளர்ச்சிக்கு முற்பட்டது; மக்கள் அநுபவ வாயிலாகப்

6. அகத்திணையியல் 30. 7. களவியல், 11.8. செய்யுளியல், 124.9. செய்யுளியல், 176