பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


பிறந்தது. அது வேறொரு செய்தியை விளக்கப் பயன்படுகின்றது. புலவர் அதனைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை விளக்கும் பாடல்கள் உண்டு. இத்தகைய பழமொழி பற்றித் தொல்காப்பியர்,

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப"

என்று குறித்துள்ளார். இதனால் முதுமொழியை உள்ளடக்கிய பழமொழி நானூறு போன்ற செய்யுள் நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை உணரலாம். -

9. " மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்பு 1. என்னும் நூற்பாவினால், தொல்காப்பியர் காலத்தில் மந்திரச் செய்யுட்களைக் கொண்ட நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. பிற்காலத்தில் பாடப்பெற்ற "திருமந்திரம்' போன்ற நூல்களாக அவை இருக்கலாம்.

10. இசையை முதன்மையாகக் கொண்ட பழம்பாட்டிடைக் கலந்த பொருளையே தனக்குப் பொருளாகக் கொண்ட பாடல்வகை பண்ணத்தி எனப்படும். இது பற்றிப் பேராசிரியர்;

மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையாவன நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப் பாட்டும்.

10. செய்யுளியல், 177. - 11. டிை, 178.