பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதேபோலப் பாட்டென்னாராயினார், நோக்கு முதலாயின உறுப்பின்மையின் என்பது. "அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க." என்று கூறியுள்ளார்.

தம் காலத்தில் இருந்த எல்லா நூல்களையும் பழுதறக் கற்ற பேராசிரியரே, "வல்லார்வாய்க் கேட்டுணர்க' என்று கூறினர் எனின், அவர் காலத்தில் பண்ணத்தி என்பது வழக்கற்றுப் புலவரும் அறிய முடியாத நிலையை அடைந்து விட்டது என்பது தெரிகிறதன்றோ?

"பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி என்பு"[1]

இப்பண்ணத்தி பற்றியே ஆசிரியர்,

"அடியிகந்து வரினும் கடிவரை யின்றே"[2]

என்று கூறினார். இதற்கு உரை எழுதிய பேராசிரியர், அவை, முற்காலத்துள்ளார் செய்யுட் காணாமையின் காட்டாமாயினோம். இக்காலத்துளவேற் கண்டு கொள்க. இலக்கணம் உண்மையின், இலக்கியம் காணாமாயினும் அமையும் என்பது, என்று கூறியிருத்தல் பண்ணத்தியின் பழைமையை நன்கு உணர்த்துவதாகும். (தொல்காப்பியர் இன்றுள்ள நூல்கட்கு முற்பட்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாதல் காண்க.)

11. தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்புகளுள் தனித்தனி வனப்புக்குரிய நூல்கள் இருந்தன என்பது, அவர் கூறும் எண்வகை வனப்புகளுக்குரிய நூற்பாக்களைக் கொண்டும் உரையாசிரியர் தரும் விளக்கம் கொண்டும் நன்கறியலாம்.

- - (1) அறம் பொருள் இன்பங்களைச் சேர்த்தும், தனித் தனியாகவும் வைத்து அடிகள் குறைந்த செய்யுட்களில்


  1. ௸ 180.
  2. ௸ 183.