பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ராற்றுப் படையையும் சுட்டியுள்ளனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ஆசிரியப்பாவினால் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் இரண்டாம் நிலைக்கு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளனர். இரண்டு இலக்கணங்களையும் கொண்டது சிலப்பதிகாரம் என்று கூறலாம். இத்தகைய நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்த காரணம் பற்றியே 'தொன்மொழிப் புலவர் தோலென மொழிப' என்று கூறினாராதல் வேண்டும்.

5. புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலைச் செய்யுள் விருந்து என்னும் வனப்பை உடையதாகும். பேராசிரியர் முத்தொள்ளாயிரம், பொய்கையார் முதலியோர் செய்த அந்தாதி நூல்களை இவ்வனப்புக்குக் காட்டாகக் காட்டுவர். கலம்பகம் முதலாயினவும் சொல்லுப' என்றும் கூறி யுள்ளனர்.

6, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ் செய்யுள் இயைபு எனப்படும்.' இயையென்ற தனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரு மென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளிராற் செய்யப்பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டிலக் கணம் உண்மையின், இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தன போலும்," என்று பேராசிரியர் விளக்கம் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையின் இறுதியும் 'ன்' என்பது பெற்று முடிகின்றது. மணிமேகலையிலுள்ள ஒவ்வொரு காதையும் இம்முறையிலேயே முடிகின்றது. ஒரு

18. டிை,239. 19. டிெ, 240.