பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் i83

இந்நால்வகை உரைநடை நூல்களும் தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்பும் தமிழில் இருந்தமையால்தான் அவர், -

பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புனர்ந்த நகைமொழி யானுமென்(று) உரைவகை நடையே கான்கென மொழிப.'"

என்று நூற்பாவொன்றினைச் செய்தனர்.

"இவையன்றி 'அகமும் புறமும்’ என்னும் பொருட்பாகு பாட்டிற்குரிய இன்பத் துறைகளிலும் கொடை, வீரம் முதலிய வற்றிலும், உற்றார் இறந்த கையறு நிலையினும், மன மகிழ்தற்குக் காரணமான மங்கலங்களிலும், எல்லாந்துறந்த துறவிலும் இன்னும் மக்கள் வாழ்நாளில் நிகழ்ந்த பல்வகை நிகழ்ச்சியினும் எத்துணையோ பலநூல்களும் உண்டாயிருந்தன வென்பது இந்நூலுள். அகத்திணை, புறத்திணை, பற்றிவரும் சூத்திரங்களால் அறியக் கிடப்பது.'

தொல்காப்பியர் தமக்கு முன்னும் தம் காலத்திலும் இருந்த பலவகைச் செய்யுள் நூல்களையும் உரைநடை நூல்களையும் தமிழ் இலக்கண நூல்களையும் நன்கு பயின்று தமது இலக்கண நூலைச் செய்தார் என்பது இதுகாறும் கூறப்பட்ட செய்திகளால் நடுவுநிலை யறிவுடையார்க்கு - இனிது புலனாகும்."

23. டிை, 178. • , 24. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 318

35. ' ' ... Much of Tamil literature and many stages ef grammars should have existed before the Tolkapplyam to satisfy the existence of this perfect Grammar,”

-T. R. Sesha Ayyangar, Dravidian India, P. 92.