பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


பல்கலைக் கழகத் துணைவேந்தருமான டாக்டர் சர். ஆ. இலக்குமணசுவாமி முதலியார் அவர்கட்கு இந்நூலை உரிமையாக்க இசைவு நல்கும்படி அப்பெரியாரவர்களை வேண்டினேன், அருள் உள்ளம் கொண்ட அவர்கள் எனது வேண்டுகோளுக்கு இசைந்ததே யான் பெற்ற பெரும் பேறாகும். அம் மூதறிஞரவர்கட்கு என் வணக்கமும் நன்றியும் உரியவாகும்.

இங்ஙனம் விரிவான முறையில் இலக்கிய வரலாறு வருவது நல்லதே எனக் கூறி எனக்கு ஊக்கமளித்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவராயுள்ள பேரறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கட்கு என் உளமார் நன்றியும் வணக்கமும் உரிய.

என் திருமகன் மா. ரா. இளங்கோவன் (M.A.) என் திருமகள் மா. ரா. தமிழரசி (M.A.) ஆகிய இருவரும் இந்நூலைப் பிழையறப் படியெடுத்தனர். அச்சுப் படிகளைப் படித்துத் திருத்தினர். இவ்விருவர்க்கும் நல்லாசி வழங்கும் படி அங்கயற்கண்ணியோடமர்ந்த ஆலவாயண்ணலை வேண்டுகிறேன்.

மா. இராசமாணிக்கம்