பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


இவ்வாறு திருக்குறள் ஒன்றை வெளிப்படையாகத் தம் நூலில் கூறி, அதனைச் செய்த ஆசிரியரைப் பொய்யில் புலவன்' என்று வியந்து பாராட்டிய மணிமேகலை ஆசிரியர் காலம் யாது என்பதை முதற்கண் ஆராய்வோம்.

மணிமேகலையின் காலம் என்ன?

1. மணிமேகலை ஆசிரியரான சாத்தனாரும், சிலப்பதி கார ஆசிரியரான இளங்கோ அடிகளும் நண்பர்கள் என்பதும், செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் இவ்விரு நூல் பாயிரங்களாலும் சிலப்பதிகார அகச் சான்றுகளாலும் அறிய லாம். இச்சாத்தனார் வாய்மொழியால் கண்ணகியின் சிறப் பறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டி வழி பட்டதற்கும், அதற்கு இலங்கை அரசனான கஜபாகு (கய வாகு) மன்னன் வந்திருந்தான் என்பதற்கும் சிலப்பதிகாரமே சான்று பகர்கிறது. கயவாகு என்னும் பெயருடைய அரசர் இருவர் முறையே கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், கி.பி. 12ஆம் நூற்றாண்டிலும் ஆண்டனர் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இவற்றுள் கி.பி. இரண்டாம் நூற் றாண்டில் ஆண்ட கயவாகுவே (கி. பி. 114-186) செங்குட்டுவன் காலத்து அரசனாதல் வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புகின்றனர். அவனே பத்தினி விழாவில் கலந்துகொண்டு தன் நாட்டிலும் பத்தினிக்குக் கோவில் கட்டியவன் ஆவான். இன்றைக்கும் சிங்களவர் பத்தினிதெய்யோ’ என்று கண்ணகியைக் கொண்டாடுகின்றனர். இலங்கையிலிருந்துதான் பத்தினியின் உருவச் சிலை இலண்டன் பொருட்காட்சிச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. .

2. மணிமேகலை 27ஆம் காதையில் கிருதகோடி’ என்னும் பெயர், வேதவியாசருடனும் சைமினி என்னும் ஆசிரியருடனும் பிரமாணங்கள் கூறுமிடத்தில் குறிக்கப் பட்டுள்ளது. கிருதகோடி’ என்பது மீமாம்சை சாத்திர

1. History of Ceylon, Vol. I, Part 1, pp. 188-185.