பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


கி. பி. 106-130°. எனவே, சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பட்ட நூற்றுவர் கன்னர் வரலாற்றுப் புகழ்பெற்ற 'சதகர்ணி அரசர்’ என்பது அறியத்தகும். இங்ங்னம் வரலாறு கொண்டும், சமய உண்மைகள் கொண்டும் அறிஞர் கூறியுள்ள முடிவுகளைக் காணின், சிலப்பதிகாரமும் மணி மேகலையும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பட்டனவாதல் வேண்டும் என்பது நன்கு தெளிவாகும்.

திருக்குறளின் பழைமை

 கி. பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப் பெற்றதாகத் துணியப்படும் மணிமேகலையில் திருக்குறள் ஆட்சி பெற்றது எனின், திருக்குறள் நூல் சாத்தனார் போன்ற புலவர்கள் படித்தறியத்தக்க நிலையில் நாட்டில் பெருமை பெற்றிருந்தது என்பது தெளிவாகும். ஆசிரியர் இக்குறளை ஆண்டுள்ள இடம் நன்கு கவனித்தற்குரியது. சோழ அரசருள் மிகப் பழையவனான (கரிகாலனுக்கும் முற்பட்ட) ககந்தன் காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதம் மருதி என்னும் பார்ப்பணியை நோக்கி,
    "தெய்வம் தொழாஅள்..................
     ..............................
     
    பொய்யில் புலவன் பொருளுரை தேராய். "

என்று கூறியதாகச் சாத்தனார் கூறியுள்ளார். ஒரு சாதாரண பார்ப்பனப் பெண்ணான மருதி இத்திருக்குறளின் கருத்தை அறிந்திருத்தல் வேண்டும் என்று சதுக்கப் பூதம் எதிர் பார்த்தது என்பது சாத்தனார் கருத்தாதல் தெளியலாம். இவ்வாறு ககந்தன் காலத்திலேயே திருக்குறள் அனைவ ராலும் அறியத்தகும் நிலையிலிருந்தது. (அஃதாவது, மணி

6. R. Sathyanatha Ayyar, History of India, Vol. 1.

      P, 207 .