பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

                                       தமிழ் மொழி இலக்கிய வரலாறு

பூதம் எதிர்பார்த்தது என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாத்தனார் கூறுவதால், திருக்குறளின் பழைமை, நன்கு புலனாகும். ஆகவே, வரலாற்றின் துணையைக் கொண்டு காலம் கூறமுடியாத ககந்தனுக்கும் முற்பட்டது. திருக்குறள் எனக் கருத இடமுண்டாகிறது.

    3. திருக்குறளைப் பாராட்டிச் சங்கப் புலவர்கள் பாடியனவாகக் கருதப்படும், திருவள்ளுவ மாலை ஆராய்ச்சிக் குரியது. அப்புலவர்கள் பாடிய தொகைநூற் பாக்களை ஆராயின், அவர்கள் பல்வேறு காலத்தவர் என்பது அறியக் கிடக்கின்றது. எனவே, பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர் பாடிய பாக்கள், பிற்காலத்தில் புறநானூறு போன்ற தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டாற்போல, பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பலர் திருக்குறளைப் பாராட்டிப்பாடிய பாக்களையும் பிற்காலத்தவர் * திருவள்ளுவ மாலை" என்னும் தலைப்பில் தொகுத்தனர் என்றே கருதுதல் பொருந்தும். அத்திருவள்ளுவ மாலையில் காணப்படும் பழம் புலவர்க்கு வள்ளுவர் சம காலத்தவர்' என்று கொள்ளுத லினும், அவர்க்கு முற்பட்டவராகக் கொள்வதே சால்புடைத்தாம்.புலவர் எவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவ நாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும்இல்லை. பெரும் பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும், தாமியற்றிய நூலின் மெய்ப்பெரு வலியால் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவர் உலகியல்பு, தெய்வப் பாவலராக வள்ளுவரைச்
    10. சாத்தனார் தாமறிந்த குறட்பாவைச் சதுக்கப் பூதத்தின் வாயிலாகத் தெரிவித்தாரேயன்றி வேறன்று எனக் கருதுவோரும் உளர். அங்ஙனம் சாத்தனார் கூறியிருப் பரேல், அது காலவழு (Anachronism) எனப்படும். மணி மேகலைக்கு முற்பட்ட சங்கப் பாடல்களிலேயே குறட் கருத்துகளும் சொற்களும் ஆளப்பட்டிருத்தலின், சாத்தனார் கூறியிருத்தல் காலவழு என்னும் குற்றத்தின்பாற்படாது எனக் கொள்ளலாம். -