பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 தமிழ் மொழி இலக்கிய வரலாறு


5. திருவள்ளுவர் தொல்காப்பியத்தை வரம்பாகக் கொண்டே திருக்குறளை இயற்றினார் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:
(1) தொல்காப்பியர், 'அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருள்கள்' என்று செய்யுளியலில் ஒரு நூற்பாவில் (102) கூறியுள்ளார்.

"அங்கிலை மருங்கின் அறமுத லாகிய

மும்முதற் பொருட்கும்உரிய வென்ப."

திருவள்ளுவர் இம்மூன்று முதற் பொருள்களை விளக்கவே திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலாக வகுத்தமைத்தார்

அறத்தினால் பொருளை ஈட்டி, அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை. தொல்காப்பியர் இக்கொள்கையையே தம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் அதனையே பின்பற்றினார்.

(2) தொல்காப்பியர்,

 "எழுத்தெனப்படுப 
  அகரமுதல்
  னகர விறுவாய்"       
                (எழுத்ததிகாரம்-1) 

என்று தமது நூலைத் தொடங்கினார். திருவள்ளுவர், 'அகரமுதல எழுத்தெல்லாம்' என்று தொடங்கி, 'கூடி முயங்கப் பெறின்' என்று னகர ஒற்றோடு திருக்குறளை முடித்தார்.

(3) தொல்காப்பியர்,

 "அருள்முங் துறுத்த அன்புபொழி கிளவி
  பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே"