பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

என்று கற்பியலில் நூற்பா ஒன்று (20) செய்தார். திருவள்ளுவர் இந்நூற்பாவின் முதலடிப்பொருளை "அருளென்னும் அன்பீன் குழவி" என ஒரு குறளிற் குறித்திருத்தல் கவனிக்கத்தகும்.

    (4) தொல்காப்பியர்,
          "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 
           மறைமொழி தானே மந்திரம் என்ப"

என்று செய்யுளியலில் (171) கூறியுள்ளார்.

  திருவள்ளுவர்,
          "நிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து
           மறைமொழி காட்டி விடும்"

எனப்பாடியுள்ளார்.

இத்தகைய ஒருமைப்பாடுகளைக் கண்டே நாவலர். டாக்டர் சோமசுந்தர பாரதியார், திருக்குறள், தொல்காப்பியத்தை அடுத்துச் செய்யப்பட்டதாதல் வேண்டும் என்று கூறி யுள்ளார்.13

     6. சிறந்த கடல் வாணிகத்தில் ஈடுபட்ட ஏலேலசிங்கர் என்பவர் திருவள்ளுவர் நண்பர் என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. அந்த ஏலேல சிங்கர் இலங்கையை வென்று அரசாண்ட தமிழனான ஏழாரனாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அஃது உண்மையாயின் திருவள்ளுவர் காலம் ஏழாரன் காலமான கி. மு. இரண்டாம் நூற்றாண்டாக இருத்தல் கூடும்.14 

இவை அனைத்தையும் நோக்க, திருவள்ளுவர் இன்ன நூற்றாண்டினர் என்று உறுதியாகக் கூறத்தக்க சான்றுகள்

     13. திருவள்ளுவர் (ஆங்கில நூல்), பக் 5-18. 
     14. History of Ceylon, Vol. I, Part I, P, 207,