பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வர்க்குக் கல்வி கற்றல், சமுதாயத்தில் பழகுதல், கைக் கொள்ள வேண்டுவன, கைவிட வேண்டுவன, மனை வாழ்க்கை, இல்வாழ்க்கைச் சிறப்பு, உழுதொழில், வாணிகம் முதலியன இன்றியமையாதவை அல்லவா? இவற்றை வற்புறுத்திக் கூறும் சிறப்புடைமையால்தான் திருக்குறள் பண்டுதொட்டுப் பெளத்த சமயப்புலவராலும், சமண சமயப் புலவராலும், சைவ வைணவப் புலவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. பின்வந்த கிறித்தவப் புலவர்களும், முஸ்லிம் புலவர்களும் இந்நூற் கருத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும் தங்கள் செய்யுட்களில் பயன்படுத்திக்கொண்டனர்.

    வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுள் வெண்பா மிகச் சிறந்தது. இவ்வெண்பாவில் மிகச் சிறிய வகையினது குறள் வெண்பா என்பது. இஃது இரண்டே அடிகளைக் கொண்டது. இரண்டே அடிகளில் விழுமிய கருத்து ஒன்றை நன் முறையில் கூறுவதென்பது எளிதான செயலன்று. பேராற்றல் மிகுந்த புலவரே இதனைச் செய்யவல்லவர். இதிலிருந்தே இதன் அருமைப் பாட்டினை அறியலாம். இத்தகைய அரிய செயலில் ஈடுபட்டு வெற்றிகண்ட பெருநாவலரை நாம் எவ்வாறு பாராட்டுவது!
    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இவற்றைப் பற்றி

முதலிய மேனாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர். நமது நாட்டில் திரு. எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, திரு. எஸ். எம். மைக்கேல், திரு. வி. ஆர். இராமசந்திர தீட்சிதர், திரு. எம். ஆர். இராசகோபால ஐயங்கார். திரு.வ.வே. சு. ஐயர், திரு. ஜான் லாசரஸ் ஆகிய அறிஞர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். தெலுங்கு வங்கம், கன்னடம், இந்தி முதலிய நம் நாட்டு மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.