பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

படிகள் மட்டும் ஒரு இலட்சத்துக்குமேல் செலவாகியுள்ளன எனின், அத்தெளிவுரையின் எளிமையையும் சிறப்பையும் நன்குணரலாம்.

தருமபுர ஆதினத்துக் கயிலை-குரு மகா சந்நிதானம் அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதியார், காளிங்கர் ஆகிய ஐவருடைய உரையையும் ஒவ்வொரு குறளுக்கும் தந்து, "திருக்குறள்-உரைவளம்"என்னும் பெயரில் முப்பாலையும் மூன்று பெரிய நூல்களாக மகாவித்வான் தண்டபாணி தேசிகரைக் கொண்டு வெளியிட்டுள்ளனர். திருப்பனந்தாள் காசிமடத்தார் இம் முறையைப் பின்பற்றித் திருக்குறள்-உரைக்கொத்து’ என்னும் பெயரில்: அடக்கவிலைப் பதிப்பாக முப்பால்களையும் மூன்று நூல். களாக வெளியிட்டுள்ளனர். திருக்குறளைப் பலர் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்துள்ளனர். அண்மையில் திருவாசகமணி, கே. எம். பாலசுப்பிரமணியம் (பி. ஏ. , பி.எல்.) அவர்கள் மிகப் பொருத்தமாக மொழி பெயர்த்துள்ளார். ஆங்காங்கு விளக்கவுரையும் இக்காலத்திற்கேற்ற மேற்கோள் விளக்கமும் தந்துள்ளார். திருவள்ளுவர் கொண்டிருந்த கருத்துகளை இந்நூல் நன்கு வெளிப்படுத்துகின்றது என்னலாம். உலக நாட்டறிஞர்கள் திருக்குறளின் ஒப்பற்ற சிறப்பினை உள்ளவாறு அறிய இந்நூல் பெருந்துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. அறிஞர் கே. எம். பாலசுப்பிரமணியம் அவர்கட்குத் தமிழ் மக்களின் வாழ்த்தும் நன்றியும் உரியவாகும். இம் முயற்சிகள் அனைத்தும் மனமார வரவேற்கத் தக்கவை. இவை திருக்குறளின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்பவை.