பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

                         171


பாராட்டியுள்ளார் எனின் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் உதியன் சேரலாதன் செய்த செயற்கருஞ்செயல் (பெருஞ் சோறு வழங்கியமை) சேரமரபினராலும் சேரநாட்டுக் குடி மக்களாலும் வழிவழியாகப் போற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும்.

பாரத நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம் ஏறத்தாழக் கி. மு. 1400-800 என்பர் பேராசிரியர் ஆர். சி. டட்.:வேறு சில வரலாற்று ஆசிரியர் ஏறத்தாழக் கி. மு. 1000 என்பர்." எனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலமும் ஏறத்தாழக் கி. மு. 1000 என்று கூறலாம். அவனை மேலே கண்டவாறு பாராட்டிப் பாடிய முரஞ்சியூர் முடிநாகனார்" முதற்சங்கப் புலவர் என்று களவியலுரை கூறுகின்றது. இடைச் சங்கத்தின் இறுதிக் காலம் தொல்காப்பியர் காலம் (கி. மு. 4ஆம் நூற்றாண்டு) என்பது முன்னரே கண்டோம் அல்லவா? எனவே, தலைச் சங்கப் புலவராகிய முடிநாகனார் காலம் ஏறத் தாழக் கி. மு. 1000 என்று கோடல் பொருத்தமாகும். இச்சேரலாதனும் முடிநாகராயரும் பாரத காலத்தவரே என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார்

4. Ancient India, pp. 15–20.

5. R. Sathyanatha Aiyar, History of India, Vol. I.,

p. 45. . .

6. முடியில் நாகவுரு தரித்த நாகர்குல அரசர் என்பது தோன்ற முடிநாகராயர்’ எனப்பட்டார். சேரர் மரபின்ரான கொச்சி அரசர் கிளைகள் ஐந்தனுள் ஒன்றற்கு அமுரிஞயூர் தாய்வழி' என்பது பெயர். உதியஞ் சேரலைப் பாடிய இப்புலவர் பெருமானது.ஊர் அம் முரிஞியூர் போலும், -மு. இராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட் கோவை 1, பக். 2-3 . * . .