பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. ஐங்குறுநூறு

முன்னுரை

இது மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட ஐந்நூறு பாக்களை உடையது. இந்நூல் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவிலும் நூறு செய்யுட்கள் உள்ளன. அவை அத்திணைக்குரிய ஒழுக்கம் பற்றியவை. ஒரம்போகியார் மருதம் பற்றிய பாக்களையும், அம்மூவனார் நெய்தல் பற்றிய பாக்களையும், கபிலர் குறிஞ்சி பற்றிய பாக்களையும், ஓதல் ஆக்தையார் பாலைபற்றிய பாக்களையும்: பேயனார் முல்லை பற்றிய பாக்களையும் இந்நூலில் பாடி புள்ளனர்.

இந்நூலை முதன் முதலில் வெளியிட்டவர் டாக்டர் உ. வே. சாமிநாதையராவர். அண்மையில் திருப்பனந்தாள் காசி மடத்துப் பொருள் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார், பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்களைக் கொண்டு விரிவான முறையில் புதிய பதிப்பு (மூன்று பகுதிகளாய்) வெளியிட்டுள்ளனர். இப்புதிய பதிப்பு மிக்க பயனுடையது; பாராட்டுக்குரியது.

ஐங்குறுநூற்றுப் புலவர்கள் : மருதம் பாடிய ஒரம் போகியார், ஆதன் என்னும் சேர மன்னனையும் அவன் வழி வந்த அவினியையும் தம் பாக்களில் வாழ்த்தியிருத்தலால் அவினி என்ற சேர மன்னன் காலத்தவராகலாம். இவர் தம் காலச் சோழ பாண்டியரையும், மத்தி, விரான் என்ற சிற்றரசர்களையும் கண்டு பழகியவர் என்பது இவர் பாக்களிலிருந்து தெரிகிறது.