பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


(257) . குறமகள் வேங்கை மலர்களைக் கொண்டு கோவிலில் உள்ள இறைவனைப் பூசித்து விழிநீர் வார வழிபடுவாள் (269).

உண்ணுநீர் கொள்ளும் துறையில் தெய்வம் உறையும், அது மக்களுக்கு நோய் செய்யும் என்று அக்காலத்தார் நம்பினர் (28). அம்மக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை. கொண்டவர்கள் என்பதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன. (110, 374, 378); தவத்திலும் நோன்பிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர் (111, 365). ஊரிலுள்ள குளத்தில் தைத்திங்களில் இளமகளிர் நீராடி நோற்பது சங்க கால வழக்கம் (84). இதனை மார்கழி நீராடல் என்றும் தைந் நீராடல் என்றும் பிற்காலத்தார் கூறுவது வழக்கம். இந்நோன்பு பற்றிய விளக்கம் 'பரிபாடல்' என்னும் பகுதியில் விரித்துரைக்கப்படும். ஊரில் இந்திரவிழவு நடைபெற்றது என்று ஒரு செய்யுள் (62) கூறுகின்றது.

அணிகள்: ஐங்குறுநூற்றுப் பாடல்களில் காணப்படும் அணிகள் சிலவேயாகும். அவை வளை (20), இழை (இழைத்துச் செய்யப்பட்டது-25), தொடி (83), காஞ்சி (176), சங்குவளையல் (196) , மணிப்பூண் (மணிகள் பதித்த, நகை-232) , மேகலை (306) , பாண்டில் (பொன்னால் வட்டமாகச் செய்யப்பட்டதோர் அணிவகை. இதனைச் சுற்றி மணிகள் கோத்து மேகலையோடு அணிதல் பண்டை மரபு -310), சிலம்பு, கழல் (388) .

பிற செய்திகள்: குடிமக்கள் நாடு காவற்பொருட்டு: அரசனை வாழ்த்துதல் மரபு (1) . கடல் துறையிலிருந்து கப்பல்கள் கடலில் ஓடின (192). கரை உடைந்து தீமை விளையாதிருக்கக் குளங்களுக்குக் காவலர்களை நிறுத்துதல் பண்டை மரபு. தினைப்புனத்தில் புலிபோல் உருவம் சமைத்து விலங்குகள் தினைப்பயிரை அழிக்காதபடி குறவர்


310 உரை, பக். 742,