பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பார்த்துவந்தனர் (246) . குறிஞ்சி நில வீடுகள் புல்லால் வேயப்பட்டு இருந்தன (252) . ஊரைச் சேர்ந்து இருப்பது சேரி (297). சங்ககாலத்தில் நூறாயிரம் என்னும் எண்ணுப் பெயருக்கு மேலாகத் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களும் வழக்கில் இருந்தன என்பது சங்கப்பாக்களால் தெரிகிறது. இந்நூலில் வெள்ளம் என்னும் பேரெண் குறிக்கப்பட்டுள்ளது (281). நள்ளிரவு 'நடுநாட் கங்குல்' (296) எனப்பட்டது. இதனால் பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை உள்ள பொழுது பாதி நாளாகக் கணக்கிடப்பட்டது என்பது தெரிகிறது. இரவு பன்னிரண்டு மணியிலிருந்து மறுநாள் பகல் பன்னிரண்டு உள்ள பொழுது அடுத்த பாதிநாளாகும். எனவே, சங்ககால மக்கள் பகல் பன்னிரண்டு மணியி லிருந்தே தங்கள் நாளைக் கணக்கிட்டனர் என்பது தெளி வாகிறது. இஃது அறியத்தகும் அரிய செய்தியாகும். .மயில்கள் மழை வரவினை அறிந்து தோகையை விரித்து ஆடும் (298),

- போரில் இறந்துபட்ட மறவர்க்குக் கல் நடுதலும், அக் கல்லில் வீரன் உருவத்தையும் அவன் பெயரையும் பிற சிறப்புகளையும் பொறித்தலும் மரபு; அந்நடுகல் எழுத்துடை நடுகல்' எனப்பட்டது; அது வீரராலும் பிறராலும் பூசிக்கப்பட்டுவந்தது (352). செல்வர் பொன்கயிறு கொண்டு யானை கட்டுதல் வழக்கம் (356). பாலைநிலத்தில் செல்பவர் நெல்லிக்காயையும் பலாச்சுளையையும் உண்பது வழக்கம் (381) .

பாண்டில்-கால் நிறுத்திய விளக்கு. இந்நூலில் யவனர் பாவைவிளக்கு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தகும்; தலைவன் தன் மகனுக்குத் தன் தந்தை பெயரை இட்டு அழைப்பது மரபு; அதனால் அம்மைந்தன் தந்தை பெயரன்" எனப்பட்டான், இவ்வழக்கு நாளடைவில். பெயரன்" எனக் குறைந்து வழங்கியது. அது இக்காலத்தில் 'பேரன்' என