பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

3.'மா விருஞ் சோலை 353 மால் இருஞ் சோலை' பரிபாடல் . 'தேமொழி அரிவை தெளிந்திசின் யானே 466

4.'தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி'

    சிலம்பு,காதை 20வரி 68

5. 'அங்கண் இருவிசும் பதிர'

(469)

'அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்'

. -நாலடியார்,செ.51

6.'இரும்பொறை-பெரியமலை

                  431

பொறையன்-மலையன் சேர அரசர்க்குரிய பெயர்களுள் ஒன்று. இரும்பொறை மரபினர்-பெரிய மலை (நாட்டின் ஆட்சிக்குரிய) மரபினர். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் பெயரைக் காண்க.

7. “பேரமர்க் கண்ணி 496.

பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே'

        -குறுந்தொகை 131

8. போதவிழ் கூந்தலும் பூவிரும் புகவே' 496

போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய'

-மணி, காதை 18, வரி 26,

9. பொன்னேர் மேனி மடந்தை' 388. 'பொன்னார் மேனியனே' -சுந்தரர் தேவாரம்

அந்தணர் கூட்டுறவு : தலைவன் ஏறிவந்த குதிரையினது நெற்றிமயிர், சிலவாய மயிர் பொருந்திய குடுமியை ஒத்திருந்ததைக் கண்ட தோழி, தலைவியை நோக்கி, நம்மூரில் வாழும் பார்ப்பணச்சிறுவர்களைப்போல நம் தலைவன் ஊர்ந்து வந்த குதிரையும் குடுமி பொருந்திய தலையை உடையது. ’’ என்று கூறி நகைத்தாள். -