பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


  • அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்

குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே...' (202)

முன் குடுமியைப் பெற்றிருத்தல் பார்ப்பனருக்கு ஆசார விதி. முன் குடுமிச் சோழியா' என்பது காளமேகப் புலவரது பாடல் தொடர். "நம்மூர்ப் பார்ப்பனர்" என்று தோழி கூறுதலை நோக்க, ஐங்குறுநூறு செய்யப்பெற்ற காலத்தில் வடமொழியாளராகிய வேதியர் பல ஊர்களில் குடியேறி இருந்தமை தெளிவாகும். வேதம் ஒதுதலால் வேள்வி நடக்கும்-அதனால் வானம் பொய்யாது மழை பொழியும்-விளைபொருள் மிகும்-இல்லறம் சிறக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. அதனாற்றான், தலைவி நாட்டு நலத்தையும் வீட்டு நலத்தையும் நினைத்தபொழுது, பார்ப்பார் ஓதுக' (4) என்றாள். -

இங்ஙனம் வேதம் ஓதி வந்ததாலும் அறவொழுக்கம் பூண்டிருந்ததாலும் தமிழ் மக்கள் அந்தணரை மிக்க மரியாதை யுடன் நடத்திவந்தனர். அவருள் ஒரு சார் நன்மக்கள் தவக் கோலம் பூண்டு பலவூர்களுக்கும் சென்று வந்தனர். தலைவி தலைவனுடன் சென்றுவிட்டதை அறிந்து அவளைத் தேடிச் சென்ற செவிலி இங்ஙனம் யாத்திரையை மேற்கொண்ட அந்தணரைக் கண்டாள்: மிக்க மரியாதையுடன் அவர்களை அழைத்துத் தன் மகள் பற்றி வினவினாள்:

சேட்புல முன்னிய வசைகடை யந்தணிர் - நும்மொன் றிரந்தனென் மொழிவல்' (384) அறம்புரி யருமறை கவின்ற நாவின் திறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவல் (387) அந்தணர் தவம், வேள்வி, நோன்பு இவற்றை மேற் கொண்டமையால் தமிழகத்துச் சமய வாழ்வில் பெரும்பங்கு கொள்ளலாயினர். அதனால் அவர்கள் சொல்லிவந்த