பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

203


பொருள் இல்லாதவர் முன்னோர் பொருளின் பயனைத்துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டிலும் இழிவுடையது (283).

பெரியோர் தம் நெஞ்சத்தில் நினைந்த ஒன்றனை நடத்தியே தீருவர் (341). சான்றோர் பிறர் உற்ற வறுமைத் துன்பத்திற்கு அஞ்சி அவர்கள் இரந்தவற்றைக் கொடுப்பர்; பிறகு தாம் கொடுத்த அவற்றைத் ‘தருக’ என்று சொல்லு தலைக் காட்டினும் தம்முயிரை மகிழ்ச்சியோடு இழப்பர் (349). செல்வம் நிலையில்லாத பொருள் (350).

மேலே கூறப்பெற்ற உயர்ந்த சுருத்துகள் பழந்தமிழர் பண்பாட்டினை நன்கு விளக்கும் சான்றுகள் அல்லவா?

மேற்கோள்: இந்நூல் சொற்களும் தொடர்களும் பிற சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே காலத்தால் பிற்பட்ட நூல்களுக்கும் இவை எங்ஙனம் துணை செய்தன என்பதை இங்குக் காணலாம்:


1. “நீர்வார் கண்னை நீயிவன் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரல்” 22

“நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய் என”

-சிலம்பு, காதை 20, வரி


2. “கடும்புனல் தொடுத்த நடுங்கஞர் அள்ளல்” 103
“ஆரஞர் உற்ற வீரபத் தினிமூன்”

-சிலம்பு, காதை 22 வரி 155


3. “வென்றி நெடுவேள் என்னும் அன்ளையும்” 111
“நெடுவேள் குன்றம் அடிவைத் தேறி”

-சிலம்பு, காதை 23, வரி 190


4. “பழுமரம் படரும் பையுள் மாலை” (172)