பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

231


தமிழர் திருமணம்:அகநானூற்றுப் பாடல்கள் இரண்டு சங்க காலத் தமிழரின் திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றன. (1) வரிசையாய்க் கால்களையுடைய குளிர்ந்த பெரிய வந்தரில் மணல் பரப்பப்பட்டிருந்தது. பந்தலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மனைவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த பொங்கலோடு விருந்து நடிைபெற்றுக்கொண்டிருத் தது. சந்திரனை உரோகிணி கூடிய நல்லோரையில் முதிய மங்கல மகளிர் மணமகளை நீராட்டுதற்குரிய நீரை முகந்து தர. மக்களைப் பெற்ற மங்கல மகளிர் நால்வர் கூடிநின்று, "கற்பினின்றும் வழுவாது நன்றாய பல பேறுகளையும் தந்து நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையை ஆகுக." என்று வாழ்த்தி, அந்நீரில் நெல்லை யும் மஞ்சளையும் கலந்து மணமகளை நீராட்டினர் (86).

இங்ங்னம் மங்கல மகளிர் மணமகளை நீராட்டுவது அக் காலத்தில் மிகச் சிறந்த சடங்காய்க் கருதப்பட்டது. செய்யுள் 186இல் வேறொரு வகைத் திருமணம் கூறப் பட்டுள்ளது.

"இறைச்சியுடன் கூட்டியாக்கிய நெய் மிகுந்த வெண் சோற்றை மணத்திற்கு வந்தவர் உண்டனர். திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்லோரையில் மண மனை அழகு செய்யப்பட்டது; கடவுள் வழிபாடு நடைபெற்றது; மன முழ வுடன் பெரிய முரசம் ஒலித்தது. வாழ்வரசிகள் மணமகளுக்கு மன நீராட்டினர். வாகை இலையை அருகின் கிழங்கிடத் துள்ள அரும்புடன் சேரக்கட்டிய வெள்ளியநூலைச் சூட்டி மணமகளைத் தூய உடையால் பொலியச் செய்தனர். மண மகள் பல அணிகளை அணிந்திருந்தாள். மேகம் ஒலித்தது போல மண ஒலி ஒலித்தது. உறவினர் அனைவரும் கூடி மண மகளை மணமகனுக்கு மனைவியாகத் தந்தனர்.

"இவ்விரண்டு திருமணங்களிலும் ஆரியச் சார்புடையது எதுவும் இல்லை-எரி வளர்த்தல் இல்லை, தீவலம் வருதல் இல்லை, தட்சிணை பெறப் புரோகிதன் இல்லை, இவை