பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


படுவது போலச் சேரநாட்டு மலைகளின் உச்சியில் பெரிய, விளக்குகள் இடப்பெற்றன போலும்!

உறையூரை யடுத்த காவிரியின் கரையிலிருந்த சோலையில் பங்குனி விழா நடைபெற்றது (137), கொங்கு நாட்டினர் மணியினை இடையில் கட்டிக்கொண்டு உள்ளி விழாவின்போது தெருவில் ஆடுவர் (368) . அக்காலத் தமிழகத்தில் உண்ணாமையால் வாடிய வயிற்றினையும், நீராடாத உடலையும் உடைய தவத்தினர் (சமணத் துறவி. கள்) இருந்தனர் (128).

நாகரிகம் : சங்ககால மகளிர் பந்து எறிதல், கழங் காடுதல் முதலிய ஆட்டங்களில் சிறந்திருந்தனர் (17, 66) . சேரவேந்தரது சுள்ளி என்ற ஆற்றில் யவனர் கப்பல் பொன்னுடன் வந்து மிளகொடு மீண்டது (148), உலகம் நகர்ந்தாலொத்த அச்சம் தோன்றும் கப்பல் (255) அக், காலத்தில் இருந்தது. -

சங்ககாலத் தமிழர் இசைக் கலையில் வல்லவர் என் பதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன (102, 186, 346, 855). திணைப்புனம் காவல்காத்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டிருந்தாள். அப்போது தினைக் கதிரைத் துதிக்கையில் பிடித்திருந்த இளைய ஆண் யானை இசையில் ஈடுபட்டுத் தினைக் கதிரை உண்ணாமலும், நின்ற நிலையிலிருந்து அகலாமலும் உறங்கிவிட்டது என்னும் செய்தி குறமகளின் இசைச் சிறப்பை இனிது விளக்குகிற, தன்றோ? (102). தினைப்புனம் காத்த குறமகளிர் தினையை உண்ண வரும் கிளி முதலிய பறவைகளை ஒட்டு வதற்குப் பாடல் பாடினர். அது 'கிளிகடி பாடல்’ எனப் பட்டது (118).

சங்ககால நடன மகள் விறலி எனப்பட்டாள்; உள்ளக் குறிப்புப் புறத்தில் வெளிப்படும்படி விறல்பட நடித்ததால் விறலி' எனப் பெயர் பெற்றாள். அவள் நடிக்கும்போது, முழவு கொட்டுவோன் அவளுக்குப் பின்புறம் நிற்பது