பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 287

12. சிவபெருமான் முப்புரம் எரித்தது (1,150), துரி யோதனன் பாண்டவரை அரக்கு மாளிகையில் கொல்ல முயன்றமை (25) , முருகன்-சூரபதுமன் போர் (27), இரா வணன் கயிலை மலையைப் பெயர்த்தது (38) , வீமன் துரியோ தனனைத் துடையில் அடித்தது (52) . கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட மல்லரை அழித்தது (52, 134), வீமன் துச்சா தனன் நெஞ்சைப் பிளந்தது (101), சிவன் எமனை உதைத் தமை (101) , அசுவத்தாமன் தன் தந்தையைக் கொன்ற சிகண்டியைக் கொன்றமை (101) கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட குதிரை உருவத்தில் வந்த அசுரனைக் கொன்றமை (103) , கண்ணன் தன் ஆழியால் மறைத்த சூரியனை மீட்டமை (104), கன்னன் சூரியனுக்கு மகன் (108), ஊர்வசி திலோத்மை பற்றிய செய்தி (109), யயாதி அரசன் கதை (189) , சிவன் தன் சடையில் கங்கையை மறைத்தமை (150), இவற்றுள் சிவன் முப்புரம் எரித்தமை யும், முருகன் சூரபதுமனை அழித்தமையும் பிறநூல்களில் இடம் பெற்றுள்ளன. ஏனையவை முதன் முதலாக இந்நூலில் தாம் கூறப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தகும். இவை அனைத்தும் இந்நூலிற்கே உரிய புதுமைகளாகும்.

கலித்தொகை ஆசிரியர்

 கலித்தொகை என்பது கடவுள் வாழ்த்து உட்பட 150 கலிப்பாக்களைக் கொண்டதாகும். இவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஒழுக்க வகையில் அமைந்துள்ளன. பாலைத்திணை பற்றி 35 செய்யுட்களும், குறிஞ்சித்திணை பற்றி 29 செய்யுட்களும், மருதத்திணை பற்றி 35 பாக்களும், முல்லைத்திணைபற்றி 17 பாடல்களும், நெய்தல் திணைபற்றி 37 பாடல்களும் இதன்கண் அமைந்துள்ளன.

ஏறத்தாழக் கி.பி.14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கருதத்தகும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதியுள்ளார். அவர் கடவுள்