பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 245

மிகவும் பொருத்தமாகும்.4 இப்புலவர், நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் நல்லந்துவனார் ஆயின் இந்நல்லத்துவனார் பிற நூல்களிலுள்ள பாடல்களைப் பாடிய நல்லந்துவனாரினும் வேறுபட்டவர் எனக் கொள்ளலே பொருத்தமுடையது. எனவே, கலித்தொகையின் காலம் சங்க இறுதிக்காலம், அஃதாவது, ஏறத்தாழக் கி.பி. 300 என்னலாம்.

    நூற் செய்திகள் சில
 ஏறு தழுவல்: காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். ஆயர் என்பவர் முல்லைநில மக்கள். பிடவம், கோடல், காயா, கொன்றை, வெட்சி, தளவம், குல்லை, குருந்தம், பாங்கர் முதலிய மலர்கள் முல்லை நிலத்திற் குரியவை. இவை தனித்தனியே கட்டப்பட்டும், கலவையாகக் கட்டப்பட்டும் ஆயரால் அணியப்பெறும் (101, 103) .
 முல்லைக்கலியுள் ஆயர் ஏறுதழுவல் பற்றிய விவரங்கள் அழகுற அமைந்துள்ளன. ஆயர் சிவபெருமான் மழுவைப் போல எருதுகளின் கொம்புகளைச் சீவுவர் (101) . எருது களுள் பலதேவனைப் போன்ற வெண்ணிறம் கொண்டவை சில; கண்ணனைப்போலக் கரியவை சில: சிவனைப் போலச் செம்மையும் கருமையும் கலந்தவை சில; முருகனைப்போலச் சிவந்தவை சில [105) ; இந்திரனைப்போல் பல புள்ளிகளை உடையவை சில; முருகனது வெள்ளிய துகிலைப்போல வெள்ளிய கால்களையுடையவை சில; எமனைப்போன்ற வலிமையுடையவை சிலவாகும் (106). இவை அனைத்தும் தொழுவத்தில் விடப்படும்.

4. இங்ங்னம் கொள்வதே மிக்க பொருத்தமாகும். இங்ங்னம் கொள்ளின், 'கலித்தொகை' என்னும் பெயர் தவறாகும்; தொகை நூல்கள் ஏழாகும். பலர் பாடினர் என்னும் தவறான கருத்தில் இதற்குக் (கலித்) 'தொகை' என்னும் பெயர் கொடுக்கப்பட்டது போலும்!