பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

23

முதலில் ‘பனை’ ஒன்றையே மரம் என்ற சொல்லால் உணர்ந்த குழந்தை, தென்னை மரத்தைப் பிறர் ‘மரம்’ என்று சொல்லும்போது ஏற்க மறுக்கின்றது. குழந்தை தன்னை ‘நல்ல பையன்’ என்று பாராட்டிய தமக்கையை, ‘நல்ல பையன்’ என்று பாராட்டுகின்றது. தன்னெதிரே மெல்ல நடந்து வரும் பூனையைப் பார்த்தும் ‘நல்ல பையன்’ என்றே கூறுகின்றது.

இவ்வாறு தொடக்க நிலையில் எந்த வேறுபாடும் உணராமல் திணை, பால் முதலியவற்றைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இருக்கும் குழந்தை, காலப்போக்கில் தன்னை அடுத்துள்ளோர் பேசுவதைக் கேட்டுக் கேட்டுக் கற்கும் சொற்களைப் பெருக்கிக்கொள்கின்றது.

மனிதன் தான் கற்ற சிலவற்றைக்கொண்டு மற்றவற்றை அமைத்துக்கொள்ளும் தன்மை ஒன்று உண்டு. அஃது ஒப்புமையாக்கம் (Anology) எனப் பெயர் பெறும். இவ்வொப்புமையாக்க முறையினால் பல வாக்கியங்கள் குழந்தையின் மூளையில் பதிகின்றன. ‘அக்காள் வந்தாள்’, ‘அது வந்தது’ போன்ற வாக்கியங்களைப் பல நாள் கூறக் கேட்டுப் பயின்று பெண்பால் வினைமுற்றும் ஒன்றன்பால் வினைமுற்றும் குழந்தைக்குப் பழக்கமாகின்றன. குழந்தை தனது இளமைக்காலத்தில் ‘எடு’ என்பதன் இறந்தகாலச் சொல்லாக ‘எடுத்தார்’ என்பதை அறிகிறது. பின்னர் அது ‘தடு’ என்பதற்குத் ‘தடுத்தார்’ என்றும், ‘கொடு’ என்பதற்குக் ‘கொடுத்தார்’ என்றும் தானே சொற்களை அமைத்துக்கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதே நிலையில் பல வாக்கியங்களை அமைக்கவும் குழந்தை கற்றுக் கொள்ளுகின்றது. நாளடைவில் எழுவாய் முதலிலும் பயனிலை. இறுதியிலும் செயப்படுபொருள் இடையிலும் அதற்கு அடையான எண்ணுப் பெயர் அதற்கு முன்னும் அமையும் அமைப்பு நன்றாக அதன் மூளையில் பதிந்து விடுகின்றது; ‘இவ்வாறு பெயர்ச்சொல்லின் வேறுபாடுகள் (Declensions), வினைச்சொல்லின் வேறுபாடுகள் (Conjuga