பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

259


அமிர்தபானம் (பாடல் 8) , மிதுனம், புன்னாகம், சண்பகம், குந்தம், மல்லிகாமாலை (பாடல் 11], யாத்திரை, பிரமம், இரதி, சோபனம் (பாடல் 19), வந்திக்க, சிந்திக்க (பாடல் 20) முதலிய வடசொற்கள் பரிபாடல்களின் பிற்காலத்தை உணர்த்துகின்றன.6 [1]


3. சங்ககாலத்திற்குப் பின்பே திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை, திருவனந்தபுரம் என்பன வைணவத் தளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. பின்வந்த ஆழ்வார்கள் இத்தளிகளைப் பாடியுள்ளனர். சிலப்பதிகாரத்திலும் இவை குறிக்கப்பட்டுள்ளன. திருமாலிருஞ்சோலை மலை பரிபாடலில் குறிக்கப்படலால் பரிபாடலின் காலம் கி.பி. 600 என்னலாம்.7 [2]


4. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் திருப்பரங்குன்றத்துச் சிவபெருமானைப் பாடியுள்ளார்; ஆயின், முருகனைப்பற்றிப் பாடவில்லை. எனவே, சம்பந்தருக்குப் பின்பே முருகன் கோவில் உண்டாயிற்று என்று கூறலாம். பரிபாடலில் அம்முருகனைப் பற்றிய பாடல்கள் இருத்தலால் அப்பாடல்களின் காலம் ஏறத்தாழக் கி.பி. 700 என்னலாம்." 8 [3]


5. கி. பி. 300க்கு முற்பட்ட தமிழிலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிய பேச்சே இல்லை. ஆனால் பரிபாடலில் அகத்தியர் 'பொதியில் முனிவன்' (பாடல் 11, வரி 11) என்று குறிக்கப்பட்டுள்ளார். 9 [4]


6. கி. பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அபிஷேக பாண்டியன் காலத்தில்


  1. 6. lbid.P.56.
  2. 7.காவிய காலம், பக்.121.
  3. 8. History of Tamil Language Literatur.P.113
  4. 8. History of Tamil Language and Literatur.P.113.-