பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


மதுரை நான்மாடக்கூடலென்று பெயர் பெற்றது. எனவே, கூடலைப் புகழும் பரிபாடல் கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.[1]

7. பதினோரம் பரிபாடலில் காணப்படும் வானிலை பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து திரு. சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள் அப்பாடலின் காலம் கி. பி. 634என்று கூறி யுள்ளார். [2]

8. நான் (பாடல் 20, வரி 82), ஆயும் (பாடல் 6. வரி 71) என்னும் பிற்காலச் சொல்லுருவங்கள் பரிபாடல், களில் பயின்றுள்ளன.[3]

இனி இவற்றை ஒவ்வொன்றாக இங்கு ஆராய்வோம் :

விடைகள்

1. பரிபாடல்களுக்கு இசை வகுத்த புலவர்களுள் கண்ணகனார் ஒருவர். புறநானூற்றில் 218 ஆம் செய்யுளையும், நற்றிணையில் 79ஆம் செய்யுளையும் கண்ணகனார் என்ற புலவர் பாடியுள்ளார். இவ்விருவரும் ஒருவரே. என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் கருது கிறார்கள்.[4]" இக்கருத்தை மறுப்பதற்கு எல்விதச் சான்றும் இல்லை. -

நன்னாகனார் என்ற புலவர், புறநானூற்றில் 381 ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். கீரந்தையாராது பரிபாடலுக்கு இசை வகுத்த நன்னாகனார் என்ற புலவரும் முன் கூறப் பெற்ற நன்னாகனாரும் ஒருவரே என்று கருதுவதில் தவ


  1. 10. ஷெ பக். 60-61.
  2. 11. L. D. Swamikkannu Pillai, Indian Ephemeries, vol. 1, Part I, pp. 98–109.
  3. 12. History of Tamil Language and Literature.р. 56.
  4. 13. பரிபாடல், பக். 18.