பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

263

கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டுள் ஒன்றான பெரும் பாணாற்றுப்படை, அக்காலக் காஞ்சிக்கு அருகில் பள்ளி கொண்ட திருமால்கோவில் இருந்ததை இயம்புகிறது.

“காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிக் தாங்குப்

பாம்பனைப் பள்ளி யமாங்தோன் ஆங்கண்”

'

(வரி 872-373)


4. திருப்பரங்குன்றத்தில் சிவனைப் பாடிய சம்பந்தர் அங்குள்ள முருகனைப் பாடவில்லை என்பது இன்றுள்ள திருப்பதிகத்தைக் கொண்டு தெரிகிறது. அவர் பரங்குன்றத்தைப் பற்றிப் பாடிய ஒரே பதிகம்தான் கிடைத்துள்ளது. சம்பந்தர் பாடவில்லை என்பது கொண்டு, அவர் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இல்லையென்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அகநானூறு 59 ஆம் பாடலில்,

சூர்மருங்கு அறுத்த சுடரிலை கெடுவேல்

“சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து

அந்துவன் பாடிய சந்துகெழு கெடுவரை'”

என்று மதுரை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். இம் மருதன் இளநாகனார்க்கு முன்பே அந்துவன் என்ற புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடியுள்ளார் என்பது இவ் வடிகளால் தெளிவாகிறதன்றோ!

“நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடா அது

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய

ஒடியா விழவின் நெடியோன் குன்றம்”

என்னும் அகநானூற்று 149 ஆம் பாடல் அடிகளும் சங்க காலத்திலேயே திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றன: அன்றியும் அக்கோவிலில்