பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

265


தியர் தொகை நூல்களிற் குறிக்கப்பெறவில்லை என்பது பொருந்தாமை காண்க.

பதினோராம் பரிபாடலில் பொதியின் முனிவன்" அகத்தியர் குறிக்கப்பட்டுள்ளார். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற சிலப்பதிகாரம் எட்டாம் காதை யில் (வரி 8) பொதியின் மாமுனி என்னும் தொடர் அகத்தியரைச் சுட்டுதலைக் காணலாம். -

6 மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்' என வரும் மதுரைக் காஞ்சி அடியும் (வரி 429) , பெரிய நான்மாடத்தாலே மலிந்த புகழைக் கூடுதலையுடைய மதுரை' என வரும் நச்சினார்க்கினியர் உரையும் காணத்தக்கவை. இவை, சங்ககாலத்திலேயே கூடலில் (நான் மாடம் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.

கலித்தொகை 92 ஆம் பாடலில் "நான்மாடக் கூடல்' ' என்பது வந்துள்ளது. கலித்தொகையின் காலம் கி.பி. 300 எனக் கொண்டாலும், அது சங்கநூலாதல் உறுதியே. எனவே, "நான்மாடக் கூடல்' என்பது கொண்டு பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது எனக் கூறல் இயலாது.

7. அறிஞர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள் பரிபாடலில் வரும் வானிலை பற்றிய செய்தி கொண்டு கூறிய காலம் பொருந்தாது என்பதைத்தக்க காரணம் காட்டிப் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் மறுத்துள்ளார். என்பது இங்கு அறியத்தகும்.[1]

8. "நான்", "ஆமாம் முதலிய சொற்கள் பொது மக்களால் பேசப்பட்ட வழக்குச் சொற்கள் என்னலாம். அவை சமுதாயத்தில் பெற்றுள்ள செல்வாக்கினால் சில சமயங்களில் புலவர் பாக்களில் இடம் பெறுதல் இயற்கை. நாம் வாழும் இக்காலத்தில் புலவர் சிலர் இல்க்கியச் சொற்


  1. 15. A description of the sky during an eclipse in poem II has been used on an attempt to fix the date of