பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


களையே பயன்படுத்தி நூல் எழுதுவதும், புலவர் பலர் எளிமை கருதிப் பேச்சு வழக்குச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தலும் இயல்பாக இருக்கின்றது. பரிபாடல்களுள் பல வழிபாட்டுப் பாடல்கள்; பொதுமக்களுக்கு உரியவை. எனவே, அவற்றிற்கு இசையும் வகுக்கப்பட்டது. ஆதலால் மக்கள் பேச்சு வழக்கிலிருந்த நான்", "ஆமாம் போன்ற சொற்கள் இடம் பெற்றன என்று கொள்வது பொருத்த மாகும்.

கண்ணன் தமையனான பலதேவனுக்குப் பனைக் கொடியும் நாஞ்சிற்படையும் உரியவை. அவை இரண்டும் திருமாலுக்கு உரியவையாகப் பரிபாடல்கள் (4, 18 கூறுகின்றன. மேலும் பலதேவனை வாசுதேவனுடன் (கண்ணனுடன் இணைத்து வழிபட்டமை பரிபாடலில் (18) கூறப்பட்டுள்ளது. இங்ஙணம் இருவரையும் இணைத்து வழிபடும் முறை மிகத் தொன்மையானது.

வடஇந்தியாவில் கோசுண்டி, நானாகாட் என்னும் இடங்களிற் கிடைத்த கல்வெட்டுகளில் வாசுதேவன்-பல தேவன் வணக்கம் இணைந்தே காணப்படுகிறது. இக்கல் வெட்டுகள் முறையே கி. மு. 3, ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. எனவே, வாசுதேவன்-பலதேவன் வணக்கம் வடஇந்தியாவில் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்தமை நன்கு தெளிவாகும்." -[1]


  1. 16the composition of the poem by astronomical calcuia tions, but it has proved a failure because the information in the text is not enough for calculating the date witheut adventitious unwarranted assumptions and the information supplied by the annotator has made confusion worse confounded.-- History of the Tamils, р, 584. - 16. Sri R. G. Bhandarkar, Vaishnavism, Saivism, and Minor Religions, pp. 3–4. -