பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

267


இவ் வணக்கம் சங்ககாலத் தமிழகத்திலும் இருந்தது, கண்ணனுக்கும் பலதேவனுக்கும் கோவில்கள் இருந்தன.புலவர்கள், ! நீ பகைவரைக் கொல்வதில் கண்ணனையும் வலிமையில் பலதேவனையும் ஒப்பை[1] எனத் தமிழரசரை வாழ்த்தினர், இருபெருந்தெய்வமும் ஒருங்கிருங் தாங்கு'[2],' என்று அவர்களை இரண்டு பெருந் தெய்வங்களாகவே கருதி வழிபட்டனர் என்பன புறநானூறு சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களால் அறியப்படும். பலதேவனுக்குப் பனைக்கொடி உரியது. தொல்காப்பியர் 'பனை" என்னும் பெயர் முன் கொடி’ என்பது வருதற்குத் தனி விதி கூறியுள்ளதை நோக்க, அவர் காலத்திலேயே இவ்வணக்கம் தமிழகத்தில் இருந்தது என்று நினைத்தல் தகும்.

கி. மு. முதல் நூற்றாண்டிலே சங்கருடன வாசுதேவர்கள் (பலதேவரும் வாசுதேவரும் மராத்தியரால் வழி படப்பட்டனர். இதே காலத்தில் இம்மதம் தெற்கிலும் பரவியிருத்தல் வேண்டும். பரிபாடல் முதலிய நூல்கள் அக்காலத்தில் எழுந்தன ஆகலாம்.[3] '

சங்ககாலம் என்பது முன்பு கூறியாங்கு மிகப்பரந்துபட்ட கால எல்லையை உடையது. அப்பரந்துபட்ட கால எல்லையில் கி. மு. நான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியம் செய்யப்பட்டது-அதற்கு முன்பு சிலவும் பின்பு பலவுமாகத் தொகை நூற் பாடல்கள் பல் காலங்களிற் பாடப் பெற்றன என்பதும், பிற்பட்ட சொல்லுருவங்களையும் வழக்குகளையும் புராணக்கதைகளையும் மிகுதியாகக் கொண்ட கலித்தொகை; பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன கி. மு. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளிற் செய்யப் பெற்றிருக்கலாம் என்பதும் பொருத்தமாகும்.


  1. 17. புறநானூறு, 56.
  2. 18. புறநானூறு, 58.
  3. 19. ஈ. எஸ். வரதராச அய்யர், தமிழிலக்கியவரலா பக், 236,